பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

சு. சமுத்திரம் ☐

கேட்பான். இதேபோல் நாடகம், நாட்டியம், கதை, நாவல் போன்றவற்றில் தங்களுக்குத்தான் பட்டா என்று நினைத்துக் கொண்டிருக்கும் அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி போன்ற எழுத்தாளர்கள் தங்களது பட்டா பறிபோய்விட்ட ஆத்திரத்தில் நாவலை விமர்சிக்காமல், நாவல் ஆசிரியரை விமர்சிக்கிறார்கள். ‘வேரில் பழுத்த பலா’வில் வருவது போலவே, ஒரு மர்மத்தனமாக கான்ட்ராக்டருக்கு உடன்போக விரும்பிய அலுவலக சகாக்கள் போல், அசோகமித்திரனை இலக்கிய மூலஸ்தானத்தில் வைக்க வேண்டும் என்றால், சா. கந்தசாமி, வண்ணநிலவன், போன்ற சூத்திரர்களை துவாரக பாலகர்களாக நிறுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள். அதேசமயத்தில் இந்த வகுப்புவாதிகளை நினைக்கும்போது மனித நேயத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட, என் மீது உயிரையே வைத்திருக்கும் பிராமண சமூகத்தைச் சேர்ந்த மதுராந்தகம் குமார், ஒரு பத்திரிகை என்னை இருட்டடிப்புச் செய்ததால் துடித்த கவிஞர் பீஷ்மன், எழுத்தாளர் சி.ஆர். கண்ணன், தீபம் திருமலை ஆகியோரை நினைத்துப் பார்க்கிறேன். வகுப்புவாதம் அதுவும் மாறும். என் அனுபவத்தில் வலுக்கட்டாயமாக வந்திருப்பது ஆச்ரியம் தான். ஆனாலும், கஸ்தூரி ரங்கன் போன்ற ஒரு பிராமண எழுத்தாளர் பீஷ்மன் போன்ற மனிதாபிமானிகளை விழுங்கிவிடும் கேந்திர நிலையிலிருக்கிறார் என்பதும் உண்மை. வேரில் பழுத்த பலாவில் மேலதிகாரியைப் பாராட்டிக் கொண்டே அவனுக்கு குழி பறிக்கும் சகாக்கள் போல், தினமணிக் கதிரில் என்னை இலக்கியவாதி என்று சொன்ன கஸ்தூரி ரங்கன், ‘கணையாழி’ப் பத்திரிகையில், அதே