பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

167

பேனாவால் ‘இடஒதுக்கீடு’ என்கிறார். எனது நாவலில் வரும் ‘பட்டா போட்ட’ கதாபாத்திரங்கள் போல், இந்த பூணூல் போட்ட மனிதர்கள் தங்களைக் காட்டிக் கொள்ளாமலே முஸ்தபா என்ற முஸ்லீம் பெயருக்குள் நுழைந்து கொண்டு பேடித்தனம் செய்கிறார்கள்.

எந்த நாவலில் என்ன எழுதினேனோ, அந்த சமாச்சாரங்கள் எனக்கே நடந்து விட்ட பின்னணியில் அந்த நாவல் எப்படி உருவானது என்பதைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

1976ம் ஆண்டு வாக்கில் ‘சென்னை வானொலி’ நிலையத்தில் வானொலி என்ற பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தேன். வானொலி நிகழ்ச்சிகளை மட்டுமே கட்டம் போட்டுச் சொல்லிக் கொண்டு 10 ஆயிரம் பிரதிகளுடன் உலா வந்த அந்தப் பத்திரிகையில் வானொலி உரையாடல்கள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள் ஆகியவற்றைப் பிரசுரித்து 50 ஆயிரம் பிரதிகளாகக் கூட்டினேன். ஆனால், ஒப்பந்தக்கார பிரிண்டர் ஒத்துழைக்கவில்லை. பயன் என்கிற வார்த்தை பய என்று வந்துவிட்டதே என்று கேட்டால் ‘ய்’ டைப் இல்லை என்பார். இப்படிப்பட்ட ஆசாமிக்கு எனது அலுவலக அக்கவுண்டண்டும் ஒருசில ஊழியர்களும் உடன்பட்டனர். ஒரு ஊனமுற்ற கருப்பு இளைஞருக்கு நான் புதிய பொறுப்பைக் கொடுத்த போது முணுமுணுத்தனர். ஒரு, பெண் ஊழியை, “சொஸைட்டியில் அந்தஸ்து இல்லாதவங்கல்லாம் ஆபிஸ்ரா வந்துட்டாங்கண்ணு” என் காதுபடவே சொன்னார். இறுதியில், அந்த கான்ட்ராக்டரைத் தூண்டி விட்டு நான் வேறு அச்சகத்திடம் இச்சகமாகி விட்டேன்