பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/169

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17Ο

சு. சமுத்திரம் ☐

எனக்கு விழாக்கள் நடத்தினார்கள். என் ஆஸ்தான பதிப்பகமான மணிவாசக நூலகத்தின் உரிமையாளர் ச.மெய்யப்பனும், அவரது சகாக்களான நாராயணன், குருமூர்த்தி ஆகியோர் இந்தப் பரிசு தங்களுக்குக் கிடைத்ததாகவே நினைத்தார்கள். தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் தியாகராஜன், து. ராஜா, மகேந்திரன் ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்தார்கள். பெல் நிறுவன ஊழியர்கள், வருமான வரித்துறை ஊழியர்கள், சங்கங்கள் இதே மாதிரி இயங்கின. கல்வி, விகடன் போன்ற மூத்த பத்திரிகைகள் வாழ்த்துகளை தெரிவித்தன. தினமணிக் கதிரும் அப்படியே... எழுத்தாளர் விக்கிரமன் அவர்கள் தாம் தலைமை ஏற்றிருக்கும் அகில இந்திய எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் ஒரு தேநீர் விழா கூட்டத்தை ஏற்படுத்தினார்... எழுத்தாளர்கள் பாலகுமாரன், இந்துமதி உட்பட பல எழுத்தாளர்கள் வாழ்த்திப் பேசினார்கள்... ‘இலக்கியவீதி’ சார்பில் அதன் தலைவர் இனியவன் செங்கையில் ஒரு பாராட்டு விழாவை நடத்தினார்.. டாக்டர் தமிழ்க்குடிமகன் உட்பட பல சிந்தனையாளர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள்... டாக்டர் ரபீர்சிங், டாக்டர் குருநாதன், டாக்டர் இளவரசு, கவிஞர் இளவேனில் போன்ற சான்றோரும், பொன்னிலன், செ. யோகநாதன், கந்தர்வன், மேலாண்மை பொன்னுச்சாமி, கு. சின்னப்பபாரதி, டி.செல்வராஜ், பிரபஞ்சன், திலகவதி போன்ற சமூக நோக்குள்ள படைப்பாளிகள் எனக்கு வாழ்த்துக் கடிதங்கள் எழுதினார்கள். கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம், டாக்டர் தயானம் பிரான்சிஸ் உட்பட தமிழகம் எங்குமிருந்தும் நூற்றுக்கணக்கான வாழ்த்துக் கடிதங்கள் வந்து குவிந்தன. என் சிந்தனையை வளமைப்