பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

175

கொடுத்து விட்டார். அந்தப் பெண்ணை நான் நேரில் விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதன்படி அந்தக் கிராமத்திற்குப் போனேன். எங்களைப் பார்த்தவுடனேயே அந்தப் பெண் கண்கலங்கினாள். முப்பது வயதுக்கு உட்பட்டவர். எங்கிருந்தோ வந்த அவள் மாமியார் - அதாவது இறந்தவரின் அம்மா, விறகுக் கட்டைப் போட்டுவிட்டு வாயிலும் வயிற்றிலும் அடித்து மகனுக்காக அழுதார். பிறகு, அந்தப் பெண்ணிடம் கொடுக்கப்பட்ட ஆறாயிரம் ரூபாயில் மூவாயிரத்தை வசதியாக உள்ள தனது கல்யாணமான மகள்களுக்கு கொடுக்க வேண்டும் என்று அழுதபடியே சொன்னார். ஆனால், மருமகள்காரி, மிக கண்ணியமாகவும், அதேசமயம் அழுத்தம் திருத்தமாகவும், “இது என் ஐயாகூடப் பிறந்த அத்தை. இவுங்கள கண்கலங்காம காப்பாத்தணும் என்கிறதுக்காகத்தான் இங்கே இருக்கேன். இல்லன்னா இந்த ரூவாயோட பக்கத்து ஊர்லே இருக்குற எங்க அண்ணந்தம்பியோட போறதுக்கு எனக்கு அதிக நேரம் ஆகாது. நான் பிறந்த வீட்டுலேயே பிறந்த என் அத்தைய விட்டுட்டு நான் போகமாட்டேன். இந்த ஆறாயிர ரூபாய் இருந்தால்தான் பாங்கு வட்டியில் காலத்தை தள்ளலாம்” என்றாள். கோதிமுடிந்த கொண்டை, மொச்சக்கொட்டை மாதிரியான உடம்பு, அழுத்தமான பார்வை அப்பப்பா..... இப்படி ஒரு கவுரமான துயரச் சுமையை சுமந்து கொண்டு கண்ணியமாகப் பேசும் ஒரு பெண்ணை நான் கண்டதில்லை. இதைக் கதையில் வர்ணிக்கப் போவதால் இத்துடன் விட்டு விடுகிறேன். இந்தப் பெண் மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நான் வாதாடினேன்.