பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/176

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

177

போல் நாட்டின் நாடித்துடிப்பை அறியமுடிகிறதோ இல்லையோ, அரசியல்வாதிகளின் ஆசாபாசங்களை அவர்களைச் சார்ந்திருக்கும் “ஒட்டுண்ணிகளை” கண்டறியமுடிகிறது. பெருந்தலைவர்கள் புதுதில்லியிலிருந்து வரும்போது பத்திரிகையாளர்களோடு நானும் விமான நிலையத்திற்குப் போவதுண்டு. அப்போது பல மாறுபட்ட கட்சித் தலைவர்களின் வரவேற்பின் போதெல்லாம் ஒரு சமூக ‘சேவகியை’ அடிக்கடி பார்ப்பதுண்டு. விசாரித்துப்பார்த்ததில், இந்த சமூகத்துக்கு ஆகாத சேவகி பெரிய பெரிய தலைவர்களுக்கு பொன்னாடை போர்த்தி அதை வீடியோவிலும் கேமராவிலும் எடுத்துக்கொள்ள செட்டப் செய்வாளாம். இவள் தலைவர்களுடன் அந்தரங்கமாக உரையாடுவது போல் பத்திரிகைகளில் பலதடவை புகைப்படங்கள் வந்திருப்பதை நானே பார்த்திருக்கிறேன். இவ்வளவுக்கும் இவள், விபச்சார தடுப்பு சட்டத்தின் கீழ் பலதடவை கைதுசெய்யப்பட்டவளாம். இத்தகையப் குற்றம் புரிந்த ஒரு பெண் சமூக சேவையில் ஈடுபடக்கூடாது என்ற அற்பத்தனமான எண்ணம் எனக்கில்லை. ஆனால் இவள், அதே தொழிலை இப்போது நாகரிகத்தோடும் கவுரவத்தோடும் செய்து வருகிறாள் என்பது தான். ஒரு தடவை குறிப்பிட்ட ஒரு கட்சியின் உள்ளூர் தலைவர்கள், இவளை ஒரங்கட்ட முயற்சித்தார்கள். ஆனாலும் அவள், எப்படியோ டில்லியிருந்து வந்த பெரிய தலைவரோடு காரில் ஏறிச்சென்று, மேடைக்கே போய், அவருக்கு இணையாக மக்களைப் பார்த்து ஆசீர்வதித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், அந்த பெரிய தலைவரிடம், கிசுகிசுத்து, இந்த உள்ளூர் தலைவர்கள் கட்டாயத்தின்