பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/177

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

சு. சமுத்திரம் ☐

பேரில் நீட்டிய காப்பியை சுவைத்து சுவைத்து குடித்திருக்கிறாள். எந்தக் கட்சியிலும் உறுப்பினராக இல்லாத இந்த அம்மையார் இப்படி பல அரசியல் கட்சிகளின் ஒட்டுண்ணியாக இன்றும் இருந்து வருகிறாள்.

மாநிலத்தலைவர்களைப் பார்த்து தேசிய தலைவர் ‘அந்த மேடத்திற்கு காப்பி கொடுங்கள்’ என்ற கட்டளையை இடச்செய்தவள். இப்படி இனி என்னெல்லாம் செய்யப்போகிறாளோ, இந்த கேரக்டரை வைத்து “சுபேதாவா சும்மாவா” என்று நான் எழுதிய சிறுகதை இதயம் பேசுகிறது பத்திரிகையில் பிரசுரமாயிற்று.