பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/179

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

சு. சமுத்திரம் ☐

கதையின் மையக்கருத்து பற்றி யோசித்தேன். சாதாரண மக்களிடம் நிலவும் விவகாரங்களாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தபோது ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. அதுவே தாழம்பூ என்ற பெயரில் இப்போது தொடர்கதையாகி பின்னர் நாவலானது.

அடிபட்ட நானும் - அடித்துவிட்ட அவளும்

சென்னை திருவான்மியூரில் நான் வீடு கட்டிய காலம். நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி. நாங்கள் குடியிருக்கும் தெரு கிட்டத்தட்ட ஒரு காடு மாதிரி. நாலே நாலு வீடுகள் இன்னும் உள்ளன. எஞ்சிய மனைகள் நீதிமன்ற வழக்கில் வைக்கப்பட்டுள்ளன. ஆகையால் இந்தப் பக்கம் திருடர்களுக்கும், திருடிகளுக்கும் கும்மாளம். ஒரு தடவை இருபது வயதுள்ள ஒரு இளம் பெண்ணும், அவளை விட ஐந்து வயது பெரிய ஒருத்தியும் ஒரு கோணி மூட்டையோடு வந்து, எதிர் வீட்டில் போட்டிருந்த இரும்பு முட்கம்பிகளைப் பிய்த்து கோணிமூட்டையில் போட்டார்கள். இதைப் பார்த்த என் மனைவி அவர்களை ‘சத்தம் போட்டார்’. ஆனால் அந்தப் பெண்களோ என் மனைவியை நெருங்கி, கிட்டத்தட்ட அடிக்கப் போயிருக்கிறார்கள். என் மனைவியும் பயந்து போய் வீட்டுக்குள் ஓடிவிட்டார். மாலையில் வீட்டுக்கு வந்த என்னிடம் நான் என்னமோ அந்தப் பெண்களை அப்படி இரும்புக்கம்பிகளை பிய்க்கும் படி சொன்னதுபோல, மனைவியின் கோபதாபப் பேச்சுகளுக்கு உள்ளானேன். ஆனாலும் நான் அந்த