பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

181

நிகழ்ச்சியை மறந்து விட்டேன். என்றாலும் அடுத்த மறுநாளே அந்த இரண்டு பெண்களும் அந்தப் பக்கம் வந்து அதே வீட்டில் மிச்சம் மீதி இருந்த இரும்புக் கம்பிகளைப் பிய்த்தார்கள். என் மனைவி என்னை உசுப்பினார். நானும் புறநானூற்று வீரன் போல் அவர்களை நெருங்கி அதட்டினேன். அவர்கள் எதிர்த்துப்பேசியதால், ஒருத்தி கையிலிருந்த கோணிப்பையை பிடித்து இழுத்தேன். இதற்குள், இன்னொருத்தி என்னை மல்லாக்க தள்ளி இரும்புக்கம்பியால் ஒரு அடி அடித்து விட்டு ஓடிவிட்டாள். இதற்குள் என் மனைவி போலீசுக்கு போன் செய்ய, போலீஸ்காரர்கள் ஆட்டோரிக்க்ஷாவில் ஓடி வந்தார்கள். மாயமாய் மறைந்த அந்தப் பெண்களை கண்டுபிடிக்க அவர்களோடு நானும் போனேன். இறுதியில் ஒரு இரும்புக் கடைக்குள் அந்தப் பெண்கள் உள்ளே போவதைக் கண்டதாக ஒருவர் சொன்னார். போலீஸ்காரர்கள் அந்தக் கடைக்குள் போகவில்லை. அது மாமூல் கடை. மாறாக என்னைப்பார்த்து “ஒரு பொம்மனாட்டியை மடக்க முடியாமே ஏன் சார் விட்டே?.... வெளியில் சொல்லாதே சார் வெட்கம்” என்று சொல்லிவிட்டு, போய் விட்டார்கள். நான் இதைக் கெட்டகனவாக நினைத்து மறந்திருப்பேன். ஆனால் வீட்டில் ஒரு சின்ன தகராறு வரும் போதெல்லாம் என் மனைவியும், என் மகளும் “ஒங்கப் புத்திக்குத் தான்... குப்பத்துக்காரிகிட்டே அடிபட்டிங்க... அவளை உங்களால் ஒன்னுமே பண்ண முடியலே.... அவளை ஏதாவது பண்ணிட்டு அப்புறமா எங்களை திட்டுங்க” என்றார்கள். அடிபட்டதை என்னால் மாற்ற முடியாது. ஆனால் மேற்கொண்டு ஏதாவது செய்ய வேண்டும். இல்லை