பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/182

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

183

என் முகத்தைப் பார்த்தார். பிறகு அவளை என்ன செய்யலாம் என்பதுபோல் யோசனை கேட்டார். காவல் துறையினர் கண்டுபிடிக்க முடியாத குற்றங்களையெல்லாம் அவள் மேல் சுமத்தி, அவளை வேலூருக்கு 6 வருடத்திற்கு அனுப்பி வைத்து விடும் நிலைமையையும் சுட்டிக்காட்டினார். அந்தப் பெண்ணை விடுவிக்கும்படி, நான் ஆலோசனை சொன்னேன். என்னுடைய புகாரையும் திரும்பப் பெற்றுக் கொண்டேன். இதனைச் சற்றும் எதிர்பாராத காவல்துறையினர் லாக்கப்பில் உள்ள அவளை என்னிடம் மன்னிப்பு கேட்க வைப்பதற்காக கூட்டிவரப் போவதாகச் சொன்னார்கள். நான் மறுத்து விட்டேன். காரணம், அந்தப் பெண்ணை சிறுமையான ஒரு நிலையில் சந்திக்க நான் விரும்பவில்லை. இப்படியாக தாழம்பூ தொடர்கதைக்கு மையக்கருத்து கிடைத்தது. இதில் சில திருத்தங்களை மேற்கொண்டு, அந்தப்பெண் கள்ளச்சாராயக்காரியாக ஆவதற்குரிய அடிப்படை காரணங்களையும் ஆங்காங்கே இணைத்து எழுதினேன்.

நான் எழுதிய ‘தாழம்பூ’ என்ற தொடர்கதையை 20 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள். நானும் அதற்கு முன்னதாகவே முடித்து விடுவதாக வாக்களித்திருந்தேன். பட்டமேற்படிப்பு படித்தவர்களுக்கு எப்படி கணையாழிக்காரர்கள் இலக்கியவாதிகளோ, அப்படி எழுதப்படிக்கத் தெரிந்த சாதாரண மக்களுக்கு, நான் ஒரு “இலக்கியவாதிதான்” என்று நினைத்ததால் எழுதுவதற்கே சங்கடப்பட்டேன். பெரும்பாலான இத்தகைய வாசகர்கள் எனது சிறுகதைகள் புரியவில்லை என்று சொல்லும்