பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

சு. சமுத்திரம் ☐

“எங்களுக்குத் தெரியும்” என்ற கண்டிப்புப் பதிலோடு போய்விட்டார்களாம். இதேபோல் முதலமைச்சர் போகும்போது காவல்துறையினர் மேற்கொள்ளும் கெடுபிடிகளால் ஏழை பாளைகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். கொத்தவால் சாவடியில் காலையிலே காய்கறிகளை வாங்கிக் கொண்டு அவை வாடும் முன்னே மத்தியானத்துக்குள் விற்று வயிற்றை நிரப்ப வேண்டிய ஏழைமக்கள் போக்குவரத்து போலீஸ் கெடுபிடியால் படாதபாடு படுகிறார்கள். அவ்வளவு ஏன்? - சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் டில்லியிலிருந்து வந்திறங்க வேண்டும். விமானம் வருவதற்கு முன்பு, அரைமணி நேரத்திற்கு முன்னதாகவே சென்னை-கன்னியாகுமரி நெடுஞ்சாலையின் விமான சாலைப் பகுதியை காவல்துறையினர் அடைத்துவிட்டார்கள். ஆனாலும் அன்றிரவு விமானம் ஒரு மணி நேரம் லேட். அப்போது கூட போக்குவரத்தை மாமூலாக்கிவிட்டு மீண்டும் முடக்கிக் கொள்ளலாம் என்று காவல்துறையினர் நினைக்கவில்லை. முதலமைச்சர் விமான நிலையத்திலிருந்து வீட்டுக்குப் போவது வரைக்கும் யாரையும் விடப்போவதில்லை என்று ‘ஒருவழி’ செய்து விட்டார்கள். இவற்றையெல்லாம் தாழம்பூவில் கொண்டு வந்திருக்கிறேன்.

அலுவலக கேசுவல்கள்

இந்தத் தொடர்கதையில் ஒரு அம்சம் அலுவலக கெடுபிடிகள். மக்களுக்கு அரசு அலுவலகத்தின் கெடுபிடிகள்தான் தெரியும். ஆனால் அந்த அலுவலகங்களுக்குள்ளேயே நடக்கும் அத்துமீறல்கள் அதிகமாகத் தெரியாது. உதாரணமாக நிரந்தரமான ஆட்கள்