இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கிறிஸ்துவக் கதைகள்
நமது சகோதர சகோதரிகள் கிறிஸ்மசைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் கிறிஸ்துவ மதமும், அதைச் சார்ந்த நண்பர்களும் என்னில் எந்த அளவிற்கு தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று எண்ணிப் பார்த்தேன். இதுவரை சிந்தித்துப் பார்க்காத எனக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த மதமும், மக்களும் ஏன் இதுவரை என்னால் நினைத்துப் பார்க்கப்படவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது.
எலியபெத்தாகும் மாரியாத்தா
எங்கள் ஊரில் கிறிஸ்துவர்கள் நான் சார்ந்த சாதியிலேயே பாதி அளவு இருக்கிறார்கள். இவர்கள் ‘தெக்கூர்காரர்'கள்; ‘வடக்கூரில்’ வாழ்கிறவர்கள் உதிரமாடனையும், சுடலைமாடனையும் கோவிலில் கும்