பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

199

அப்படியே நீடிக்கிறது. எங்கள் பக்கம் ‘மண்டைக்காடு’ வரவில்லை; வரவும் வராது.

எங்கள் ஏரியாவிலேயே அதிமாகப் படித்து ஒன்றிய ஆணையாளராகப் பணியாற்றிய ஒருவர், டில்லியில் வேலைபார்த்த என்னை நேரிடையாக அழைத்துத் தனது மகளை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார். அவர் கிறிஸ்துவர். எனக்கும் பெண்ணைப் பிடித்துவிட்டது. நானும் தலையாட்டினேன். உடனே அவர் ஞானஸ்நானம் எப்பொழுது வைத்துக் கொள்ளலாம் என்றார். நான் இலேசாய்த் தயங்கி மறுநாள் பதில் அளிப்பதாகத் தெரிவித்தேன். நான் வரட்டும் என்று அவரும், அவர் வரட்டும் என்று நானும் இருந்து விட்டோம். இல்லையானால் நான் ஒரு தாமஸ் ஆகவோ அல்லது ஜேசுராஜாவாகவோ மாறி இருப்பேன்.

திடப்பட்டவள்

கிறிஸ்தவப் பின்னணியில் எனக்குப் பிடித்த ஒரு சிறுகதையை எழுதியிருந்தேன். அதற்கு திடப்பட்டவள் என்று பெயரிட்டேன். எங்களுடைய உறவுக்கார மூதாட்டி ஒருவர் இன்னும் தனது பாதிரியார் மருமகனுடன் இருக்கிறார். இவர் வாயில் அதிரடியான வார்த்தைகள் எதையும் கேட்க முடியாது. யாராவது திட்டினால் கூட ‘ஏசுவே’ என்றுதான் தனக்குள்ளே பேசிக்கொள்வார். எவராவது நோய்ப்பட்டிருந்தால், உடனடியாக அவர்களுக்காக ஜெபிப்பார். ஆனால் யாரையும் தனது வழிக்கு வரும்படி சொல்லவே மாட்டார். கிராமத்தில் ஆசிரியையாக பணியாற்றிய இவர் தனக்கு குழந்தை