இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சுண்டைக்காய் சுமப்பவர்கள்
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வாசுகி பத்திரிக்கையிலிருந்து பழம் பெரும் எழுத்தாளரான திரு தாமரை மணாளன் எனக்கு டெலிபோன் செய்து, உடனடியாக ஒரு சிறுகதை வேண்டும் என்றும் அதை முதல் இதழிலேயே வெளியிட விரும்பவதாகவும் குறிப்பிட்டார். எனவே உடனடியாக கதை அனுப்புவது என்று தீர்மானித்தேன். ஆகையால் வழக்கம் போல் கடற்கரை மண்ணில் உட்கார்ந்து சிந்தித்தேன்.
அதிகார வர்க்கம், எந்தச் சூழலையும் தனக்கு சாதகமாத் தன் சுயநலத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் வல்லமை பெற்றது. பாரதப் பிரதமரின் புதிய பொருளாதார கொள்கையை எங்களைப் போன்ற ‘மூத்த’ அதிகாரிகளுக்கு, விளக்க வேண்டுமென்று, டில்லி, பம்பாய், திருவனந்தபுரம், கெளஹாத்தி ஆகிய இடங்களில், கான்பரன்ஸ்கள் போட்டார்கள். நூற்றுக்க