பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

சு. சமுத்திரம் ☐

ளுக்கு ஓ.டி.கொடுக்காமல் சிக்கனத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று பெரிய அதிகாரிகளை அறிவுரை சொல்ல மறக்க மாட்டார்கள். இந்த கதை ‘வாசுகியின்’ முதல் இதழில் பிரசுரமானது.

டிரைவர்கள் என்றதும் அவர்களுக்கும் எனக்கும் உள்ள உறவு நினைவுக்கு வருகிறது. பொதுவாக, நான் பணியாற்றிய அத்தனை அலுவலகங்களிலும் உள்ள டிரைவர்கள், என் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பவர்கள். காரணம், அவர்களுக்கும் போலீஸுக்கும் ஏற்படுகின்ற தகராறுகளை நான் தீர்த்து வைப்பதுண்டு. ஒரு தடவை, ஒரு அம்பாஸிடர் காரில், நானும் எனது பெரிய அதிகாரியும் போய்க் கொண்டிருந்தோம். வழியில், ஒரு கான்ஸ்டேபிள் டிரைவரை மடக்கினார். பிரகாசமான விளக்கை வண்டிகளில் போடக் கூடாது என்பது போக்குவரத்து விதி. இதனால் எதிரில் வரும் டிரைவர்களின் கண் கூசி விபத்து ஏற்படும் என்பதற்காக போடப்பட்ட உத்தரவு. எங்கள் டிரைவர் இரவில், எரிந்த விளக்கை, பகலில் அணைக்க மறந்து விட்டார்! இந்த கான்ஸ்டபிள் எப்படி பிரகாசமாக லைட்டைப் போடலாம் என்று பகலில் மிரட்டினார். டிரைவரோ, அந்த விதி போடப்பட்ட காரணத்தைச் சுட்டிக்காட்டி, இப்போது எரியும் லைட், யார் கண்ணை கூச வைக்கிறது என்று கேட்டவரா? வழக்கு எழுதப் போனார். இந்த அநியாயத்தை தட்டிக்கேட்கும் தைரியமில்லாமல் எனது பெரிய அதிகாரி ஒரு தினசரி பத்திரிகைக்குள் தலையை முக்கிக் கொண்டார். நான், கான்ஸ்டேபிளிடம் கண்டிப்புடன் பேசப் போன போது “டிரைவர்பாடு, கான்ஸ்டபிள்பாடு விடுங்க” என்றார்.