பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

205

நான் விடவில்லை. இந்த நிகழ்ச்சியோடு, இன்னொரு நிகழ்ச்சியும் நினைவுக்கு வந்தது. தாலுகா மட்டத்திலுள்ள ஒரு அதிகாரி, ரத கஜ துரகபதாதி அலுவர்களுடன் டூர் போனார். பொதுவாக சீனியர் அதிகாரி முன்னிருக்கையில், அதுவும் இடது பக்கம் உட்காருவார். ஜூனியர் அதிகாரி, டிரைவருக்கும் இந்த பெரிய அதிகாரிக்கும் மத்தியில் உட்காருவார். இந்த எழுதப்படாத விதியின்படி ஜீப் புறப்பட்டது. ஒரு ஓட்டலுக்கு போனது. அந்த அதிகாரியுடன் வந்த உதவியாளர்களும் அந்த பெரிய அதிகாரிகளும் எதிரும் புதிருமாக உட்கார்ந்தார்கள். டிரைவர் தெரிந்தோ, தெரியாமலோ அந்த அதிகாரியின் பக்கத்தில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து விட்டார். உடனே அந்த பெரிய அதிகாரி “வேற இடமா போய் உட்காருய்யா” என்று அதட்டினார். டிரைவர், உடனடியாக எழுந்தார். ஜீப்பை அங்கேயே விட்டுவிட்டு, எங்கேயோ மாயமாய் மறைந்து போனார். அவர் திரும்பவே இல்லை. இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் ஒன்றாக்கி ‘செம்மலரில்’ கதை எழுதினேன்.

பனிப்போர்

குமுதத்திலிருந்து ஒரு அழைப்பு வந்தது. ‘அன்று இரவு எனக்கு தூக்கம் பிடிக்கவில்லை. காரணம் என்னவென்றும் தெரியவில்லை’ என்ற முதல் வரியோடு கதையைத் துவக்கவேண்டுமென்றும், இதே வரியை வைத்து எழுத்தாளர்கள் பாலகுமாரன், சுஜாதா முதலியோர் எழுதுகிறார்கள் என்று குறிப்பிட்டார்கள். இரண்டு நாட்களில் கதை வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்கள். பொதுவாக பிறத்தியார் கொடுக்கும்