பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

சு. சமுத்திரம் ☐

ஒரு வீடும் வாடகைக்கு கிடைத்தது. ஓராண்டுக்கு பிறகு, ஒருநாள் அவர் குடித்து விட்டு வீட்டுக்கார அம்மாவை (வீட்டின் உரிமையாளரை) கலாட்டா செய்வதாக செய்தி வந்தது. நானும் ஓடிப்போய்ப் பார்த்தேன். பழைய வாடகைக்காரி ஒருத்தியை அரிவாள் மனையால் வெட்டிய அந்த வீட்டுக்கார அம்மா, இப்போது குடித்துவிட்டு, ‘மண் வாசனையுடன்’ அவளைத் திட்டிக் கொண்டிருந்த என் உறவுக்காரரைப் பார்த்து நடுநடுங்கிக் கொண்டிருந்தாள். அந்த குடிமன்னன் அந்த அம்மாவை நோக்கி கால்களை தூக்கிக் காட்டினார். கைகளை ஓங்கிக்காட்டினார். இது அதிக பட்சமாக தெரிந்தது. “உன்னை என்ன செய்கிறேன் பார்” என்று அந்த போதைக்காரரை மிரட்டி விட்டு வெளியேறினேன். எனது கெளரவத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் அவர் சுபாவமே கூடாது என்றும் அதற்காக அவர் டெலிபோனை துண்டிப்பது என்றும், பேன்சி கடையை இழுத்து மூடி விடுவது என்றும் தீர்மானித்தேன். சிறிது நேரத்திற்குப் பிறகு அவர் மனைவி என்னை வீட்டில் வந்து பார்த்தாள். அவர் விட்டுப்போன குடியை தொட்டதற்கான காரணத்தை விளக்கினாள், வீட்டுக்காரம்மா, அவர்களை நாயே, பேயே என்று திட்டுவதாகவும், கைப்பம்பை பூட்டிப் போடுவதாகவும் கழிவறையை மூடிப் போடுவதாகவும், இரவில் சாப்பிடும் சமயத்தில் மின்சார சுவிட்சை ஆப் செய்து விடுவதாகவும் குற்றம் சாட்டினாள். அவளை சமாளிப்பதற்காக, தானே, கணவனை குடிக்கச் சொன்னதாக ஆணித்தரமாகச் சொன்னாள். அவள் சொன்ன விதம் என் மனதில் இன்னும் அப்படியே இருக்கிறது. “இதுதான் கூகையாச்சே... குடிக்காட்டா