பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

சு. சமுத்திரம் ☐

அலிகளின் கிலிகள்

‘வாடமல்லி’யை எழுதுவதற்கு முன்பு தினமலரின் மூத்த செய்தியாளர் நூருல்லா, அலிகளைப் பற்றி எழுதிய ஒரு சிறு நூலை மீண்டும் படித்தேன். ‘இந்தியா டுடே’யில் வந்த ஒரு கட்டுரையையும் படித்தேன். இவை அலிகளைப் பற்றி ஒரு அறிமுகமாவும், அவர்களது கேளிக்கை பற்றிய விமர்சனமாகவும் இருந்தனவே தவிர, முழுமையாக இல்லை. கடலூருக்கு அருகே உள்ள அதிராம்பட்டினத்தில் அலிகள் நடத்திய அரவான் விழாவை கண்ட அனுபவத்தில், சென்னையில் அலிகள் குவிந்திருக்கும் பகுதிக்குச் சென்றேன். தமிழக அரசின் தலைமையகத்திற்கு அருகே சந்தும் பொந்துமான ஒரு குடிசைப் பகுதியில் சேலை கட்டிய அலிகள் நைந்தும் பிய்ந்தும் வாழ்வது கேள்விப்பட்டு இன்னொரு நண்பரோடு அங்கே சென்றேன். எங்களது உருவ அமைப்பைப் பார்த்துவிட்டு, நாங்கள் போலீஸோ என்னமோ என்னமோ என்று பயந்து விட்டார்கள். பேச வந்த இளம் அலிகளை, முதிய அலிகள், ‘கபடி, கபடி’ என்றார்கள். அதாவது போங்கள் போலீஸ் என்றார்கள். போலீஸ் என்றால் அவர்களுக்கு அவ்வளவு பயம். எப்படியோ அந்த அலிகளின் தலைவியான, குருவக்காவிடம் போனோம். அசல் பெண் மாதிரியான தோற்றம். சிறட்டைப் பொட்டு மாதிரியான நிறம் அவளிடம் அல்லது அவனிடம் நான் அவர்களது பிரச்சனைகளை ஆத்மார்த்தமாக மனிதாபிமானத்தோடு எழுதப் போவதாகக் குறிப்பிட்டேன். ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய குருவக்கா. பிறகு என்னைப் புரிந்து கொண்டாள். வீடுகளிலிருந்து