பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/217

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
20
பேச முடியாதவைகளுக்காக...


முயல் போட்ட மூன்று முடிச்சு

அண்மையில் வானொலிச் செய்தியாளர் என்ற முறையில் திருவண்ணாமலைக்கு அருகே உள்ள ஒரு முயல் பண்ணைக்குச் சென்றேன். ஸ்பிக் பல இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து முயல் பண்ணை, மீன் பண்ணை, காளான் பண்ணை போன்றவற்றை அமைத்துக் கொடுத்திருக்கிறது. நான் மாவட்ட அதிகாரிகளுடனும் ஸ்பிக் நிறுவன ஊழியர்களுடனும் ஒரு முயல் பண்ணையைப் பார்வையிட்டேன். விதவிதமான முயல்கள்; பொன்நிறம் கொண்டவை, ஜோதி நிறமானவை பல்வேறு வகைகள். ஆனால் அத்தனைக்கும் ஒரு ஒற்றுமை. இவற்றை அறுத்தால்கூட சத்தம் போடாதாம். அந்த அளவிற்கு அப்பிராணிகள். பண்ணை இளைஞர் ஒரு முயலை காதோடு அழுந்தப் பற்றி தூக்கினார். அப்போதுகூட அதன் முகத்தில் ஒரு சின்ன முணுமுணுப்பு இல்லை. இந்த முயல்களைப்