பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/218

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

219

பற்றி அவர் சொன்ன இன்னொரு தகவல் என்னை வியப்புறச் செய்தது. பொதுவாக பெண் முயல்களையும், ஆண் முயல்களையும் தனித்தனிக் கூடுகளிலேயே அடைத்து வைக்க வேண்டுமாம். ஆண் முயலை, பெண் முயலின் கண்ணில்கூட காட்ட கூடாதாம். அப்படிக் காட்டிவிட்டால் போதுமாம் பெண் முயலுக்கு, தான் கர்ப்பம் தரித்து விட்டோம் என்று எண்ணம் ஏற்பட்டு ஒரு போலித்தனமாக கர்ப்பம் கூட ஏற்பட்டு விடுமாம். பிரசவம் இல்லாத சேர்க்கை கர்ப்பம். இதனால் ஆண் முயலின் சேர்க்கைக்குப் பிறகும் இந்தப் பெண் முயல்கள் கர்ப்பம் அடைய முடியாதாம். ஆகையால் பெண் முயல்களுக்கு பருவம் வரும்போது (ஆறாவது மாதம் இவைப் பூப்பெய்து விடுமாம்.) இந்த பெண் முயலை ஆண் முயலின் கூட்டில் விட வேண்டுமாம். இதன் கூட்டில் ஆண் முயலை விட்டால் பெண் முயல் அந்த ஆணைத் துரத்தி விடுமாம். ஆகையால் பெண் முயலை, ஆண் முயல் கூட்டில் விட்டு அது சூழல் புரியாமல் குழம்பும்போது, ஆண் முயலை சேர்க்கைக்கு விட்டு விட வேண்டுமாம். எல்லாம் சரி, பெண் முயலுக்கு விரகதாபம் வந்திருப்பதை எப்படி அறிந்து கொள்வது? அடித்தால்கூட அழத் தெரியாத இந்தப் பெண் முயலுக்கு பருவதாகம் வரும்போது அதன் பிட்டம் ஆடுமாம், அல்லது அதை ஆட்டிக் காட்டுமாம். பிட்டத்து முடிகள் அதிர்ந்து, அதிர்ந்து நெளியுமாம்... இந்த சமிக்ஞைதான் பெண் முயல், துணை தேடும் வேட்கையைப் புலப்படுத்துவது. இந்த விவரங்களை உள்வாங்கிக் கொண்டு சென்னைக்குத் திரும்பினேன். குமுதம் பத்திரிகை பெண்களுக்காக ஆரம்பித்திருக்