பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

சு. சமுத்திரம் ☐

கும் ‘மலர் மல்லிகைக்கு’ ஒரு கதை கேட்டார்கள். வழக்கம்போல் அடையார் பீச்சில் உட்கார்ந்து ஒரு அப்பாவி முயல் போல் விவரம் தெரியாமல் வளர்க்கப்படுகிற ஒரு பெண்ணும், தனக்கு திருமணம் செய்ய வேண்டும் என்பதை மறந்துபோன பெற்றோருக்கு எப்படி புலப்படுத்துவாள்? என்று எண்ணிப் பார்த்தேன். அதுவே ஒரு யதார்த்தம் கலந்து கற்பனையாகி கதையானது. இதற்கு ‘நெளிவு’ என்று குமுதம் பால்யூ பெயரிட்டார். ‘முயல் போட்ட மூன்று முடிச்சு’ என்பது பொருத்தமாக இருக்கும் என்றும் பின்னர் குறிப்பிட்டார்.

சிறைச்சாலை என்ன செய்யும்...?

இதேபோல் சிவகாசிப் பக்கம் டூர் போயிருந்த போது ஒரு புறாக் கூண்டைப் பார்த்தேன். பல்வேறு வகையான புறாக்கள்... இந்தப் புறாக்கள் காட்டுக்குப் போய்விட்டு மீண்டும் திரும்பி வந்து விடுமாம். வரும்போது காட்டு ஆண் அல்லது பெண் புறாக்களை கூட்டி வந்து விடுமாம். காட்டில் சுதந்திரமாகத் திரியும் புறாக்கள் காதல் வயப்பட்டு, பூனைகளும், நாய்களும் பயமுறுத்துகிற கிராமங்களுக்கு காதல் கிழத்திகளோடு வருகின்றன என்றால் அது புனிதக் காதல் அல்லவா?... நாட்டுப்புற புறாக் காதலிகளோடு அல்லது காதலர்களோடு கூண்டில் அடைபட சம்மதிக்கின்றன என்றால் அது காதலின் சக்திதானே.... இதை வைத்து ‘சிறைச்சாலை என்ன செய்யும்,’ என்ற சிறுகதை எழுதினேன்...