பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


3
‘ஒரு கோட்டுக்கு வெளியே’
- பிறந்த கதை


துவரை நான் எழுதிய எட்டு நாவல்களில், “ஒரு கோட்டுக்கு வெளியே” என்ற எனது படைப்பு பிரபல திறனாய்வாளர்களான வல்லிக்கண்ணன், “செம்மலர்” ஆசிரியர் திரு.கே.எம். முத்தையா, பேராசிரியர் பாக்கியமுத்து, பேராசிரியை சரோஜினி பாக்கியமுத்து, சிட்டி - சிவபாத சுந்தரம், செந்தில்நாதன், எஸ்.ஏ. பெருமாள், கதிரேசன் ஆகியோராலும், பல்வேறு வாசகர்களாலும் சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. இதனால் ஒரு வேளை இந்த படைப்பிலிருந்து நான் முன்னேற முடியவில்லையோ என்று எனக்குள்ளே ஒரு சந்தேகம் எழுவதுண்டு. என்றாலும், இந்த நாவல்தான் எனக்கும் பிடித்த நாவல். “சோற்றுப்பட்டாளம்” முதலில் அச்சில் வெளிவந்தாலும், என் எழுத்தில் முதலாவது வந்த நாவல் இதுதான். அனுபவப்பட்ட