பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

223

ளையத்திற்குச் சென்றேன். திரு. ஜின்னா அவர்கள் சொன்னதுபோல அங்குள்ள முஸ்லீம் பெருமக்கள் இயலாமையில் தவிப்பதைப் புரிந்து கொண்டேன். விவரங்களைச் சேகரிக்கச் சேகரிக்க அங்குள்ள முஸ்லீம் மக்கள் அநியாயமாகப் பழிவாங்கப்பட்டது புரிந்தது. இதை ஒரு நாவல் ஆக்கவும் திட்டமிட்டேன்.

இஸ்லாமிய மக்களைப் பற்றி ஒரு (இந்து) எழுத்தாளன் எழுதும்போது எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனாலும் இவர்களை ஒரு ஆத்மார்த்தமாக நேசித்ததால் தைரியப்பட்டேன். மசூதிகளுக்குச் சென்று இவர்களின் தொழுகை முறைகளை தெரிந்து கொண்டேன். பெரியவர்களிடம் என்னுடைய நோக்கத்தை குறிப்பிட்டு பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். பெரியவர்களின் வரவேற்பு கிடைத்த அதே சமயம் சில முஸ்லீம் இளைஞர்கள் என்னை குறுக்கு விசாரணை செய்து, வேண்டாவெறுப்பாய் அனுமதித்தார்கள். நான் மனம் தளரவில்லை... திருக்குரானைப் படித்தேன்... பல்வேறு இஸ்லாமிய தொழுகை முறைகளை விளக்கும் நூல்களை வாசித்தேன்... என் முஸ்லீம் நண்பர்களோடு ‘ஜமாத்’ பற்றியும், அவர்களது வீட்டு கலாச்சாரம் பற்றியும் துல்லியமாகத் தெரிந்து கொண்டேன். அதோடு கல்லூரி படிப்பிற்குப் பிறகு சின்னாளப்பட்டிக்கு அருகேயுள்ள ஆத்தூரில் முஸ்லிம் தாய்மார்களுக்கான பாய்முடையும் கூட்டுறவு சங்கத்திற்கு, இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டிருந்தேன். அந்த தாய்மார்களின் வீட்டிற்குத் தாராளமாகச் சென்று உணவு அருந்தும் உரிமை எனக்கிருந்தது. ஆகையால் மேலப்பாளையம் சம்பவத்தை ‘மூட்டம்’ என்ற பெயரில் செம்மலரில் தொடர்கதையாக எழுதினேன். ஒரு இந்துவுக்கும், முஸ்லீமுக்கும் (இருவருமே