பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

சு. சமுத்திரம் ☐

கொழுத்த பணக்காரர்கள்) ஏற்படும் ‘தொழில் போட்டி’ அயோத்தி சம்பவத்திற்கு பிறகு எப்படி வகுப்புவாதமாக மாறுகிறது என்பதையும், அதே சமயம் இந்து, முஸ்லீம் பாட்டாளிகள் எப்படி அண்ணன் தம்பியாக வாழ்கிறார்கள் என்பதையும் விளக்கி இருந்தேன். கல்லூரி இந்து - முஸ்லீம் காதல் பகையாக மாறும் போது, பெட்டிக்கடை - வெற்றிலை பாக்கு இந்து முஸ்லிம் காதல் எப்படி உதயமாகிறது என்பதையும் எழுதியிருந்தேன். அண்மையில் நான் எழுதிய நாவல்களில் எனக்கு பிடித்த நாவல் இது....

ஒரு படைப்பு அதன் சமூக தாக்கத்தின் அடிப்படையில் விமர்சிக்கப்பட வேண்டியது என்பது என் கருத்து. நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினால் அது நல்ல படைப்பு... மோசமான தாக்கத்தை ஏற்படுத்தினால் அது நச்சுப் படைப்பு... இப்படித்தான் விமர்சன அணுகுமுறை இருக்க வேண்டும். ஆனால் நமது விமர்சன பண்டிதர்களோ, ஒரு படைப்பின் சமூக தாக்கத்தைப் பற்றி கவலைப்படாமல் அதிலுள்ள இலக்கியக் கிருமிகளைத் தான் பூதக்கண்ணாடி போட்டு ஆராய்ச்சி செய்கிறார்கள். இந்த விமர்சன நீரோக்களுக்கு மூட்டம் பிடிக்காமல் போகலாம்... ஆனால் முற்போக்கு இலக்கியத்தில் இது ஒரு முத்திரை....

நன்றி தோழர்களே...
வாய்ப்புக் கிடைத்தால்...
அதாவது இந்தக் கதைகளின் கதை
கையைக் கடிக்கவில்லையானால்,
இதே பாணியில்
மீண்டும் சந்திப்போம்.