பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்படியே சேர்த்திருக்கிறேன் (மூட்டம் நாவல் மட்டும் இதற்கு விதிவிலக்கு) கிறிஸ்தவ இலக்கிய சங்கத்தின் மூலம் என்னை அறிமுகப்படுத்தியவர் பேராசிரியர் பாக்கியமுத்து. இந்தச் சங்கத்தின் இனிய பொதுச் செயலாளரான டாக்டர் தயானந் பிரான்சிஸ் அவர்கள் என்னை இன்னும் கெளரவப்படுத்திக் கொண்டு இருப்பதை நினைத்தால் நெஞ்சம் நெகிழ்கிறது.

ஆனந்த விகடனில் என் சிறுகதைகளை வெளியிட்ட அதன் ஆசிரியர் திரு.பாலசுப்பிரமணியம் என்றால், அதை வெளியிட உதவியவர்கள் தாமரைமணாளன், ஜே.எம். சாலி, வி.எஸ்.வி. ஆகியோர். இதேபோல் குமுதத்தில் என் கதைகள் வர காரணமானவர் எஸ்.ஏ.பி. அவர்கள். இதற்கு உதவியவர்கள் ஜ. ரா. சுந்தரேசன், சண்முகசுந்தரம் ஆகியோர். இந்தக் கட்டத்தில் என் கதைகளைப் பாராட்டி முதன் முதல் கடிதம் எழுதியவர் “இலக்கிய வீதி” இனியவன். இவரும், இந்த அமைப்பைச் சேர்ந்த எழுத்தாளர்களும், கவிஞர்களுமான மது.ராஜேந்திரன், எம்.வி.குமார், எஸ்.குமார், எஸ். வெங்கடேசரவி, குமார கிருஷ்ணன், தாராபாரதி, பல்லவன் ஆகியோர் இன்றும் என் எழுத்தையும், என்னையும் நேசிப்பவர்கள்.

தாமரையில்...

அடுத்த கட்டமாக, என் கதைகளுக்கு அழுத்தம் சேர்த்தவர் கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம்; இவரை ஆசிரியராகக் கொண்ட தாமரையில், கடல்மணி என்ற பெயரில் “புறம்போக்கு மரங்கள்” என்ற சிறுகதை முதன் முதலாக பிரசுரமாயிற்று. “இந்த மரம் அபாரம். இதில் ஒரு கொப்பைக் கூட நான் ஒடிக்கவில்லை” என்று கவிஞர் எழுதியதை இப்போது இனிமையோடு நினைத்துப் பார்க்கிறேன். இவர் மூலம் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் நட்பும், அதன் மூலம் தொ.மு.சி., தி.க.சி. “சரஸ்வதி” ஆசிரியர் விஜயபாஸ்கரன், “சோவியத்நாடு” பத்திரிகையைச் சேர்ந்த பெரியவர்கள் ஆளவந்தார், ராதாகிருஷ்ணன், ஜனசக்தியைச் சேர்ந்த ஆர்.கே. கண்ணன், எம்.எஸ். கிருஷ்ணன், தா. பாண்டியன் ஆகிய சிந்தனையாளர்களின் தோழமை கிடைத்தது. வழக்கறிஞர் என்.டி.வானமாமலை, கம்யூனிஸ்ட் தலைவர்கள் கல்யாணசுந்தரம், பா. மாணிக்கம், தியாகராஜன், ஆர். நல்லகண்ணு, கே.டி.கே. தங்கமணி, கோவில்பட்டி அழகிரிசாமி, கோபு ஆகிய தன்னல மறுப்பு