பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

சு. சமுத்திரம் ☐

எழுத்தாளன் ஆனபிறகு, உருவாகிய படைப்புகளை விட, இந்த நாவல் எப்படி மக்களைக் கவர்ந்தது என்பதை நினைத்துப் பார்க்கிறேன். எனக்கே காரணங்கள் புரியவில்லை. ஒருவேளை, உத்தி, உள்ளடக்கம், உருவம், உதாரணங்கள் போன்ற இலக்கியத் தொல்லைகளைப் பற்றிக் கவலைப்படாமல் எனக்குத் தோன்றியதை உள்ளது உள்ளபடியே எழுதியதே இதன் வெற்றிக்கு ஒரு காரணமாக இருக்கலாம். இதனாலேயே இந்த நாவலை இந்தக் கட்டுரைக்காக மீண்டும் படித்தபோது என்னை நானே ஒரளவு பூட்டி வைத்திருக்கும் இலக்கியச் சிறையிலிருந்து மீள வேண்டும் என்பது போன்ற ஒரு எண்ணம் ஏற்படுகிறது. இந்த நாவல் பிறந்த கதையைப் பார்ப்போம்.

அப்போது தமிழகத்தின் வடபகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நேரம். நான் மத்திய அரசில் செய்தி விளம்பர அதிகாரி என்ற முறையில் செங்கை மாவட்டத்திலுள்ள உத்திரமேரூரில் திரைப்பட பிரிவுடன் முகாமிட்டிருந்தேன். பயணிகள் விடுதியில் தங்கியிருந்தேன். அப்போது பலத்த மழை. அங்குள்ள ஏரி உடைந்து விடுதிக்கு வரக்கூடிய அபாயம். வெளியுலகத்திற்கும் எனக்கும் தொடர்பு அற்றுப் போய்விட்டது. எப்படியோ ஒரு நண்பர் கஷ்டப்பட்டு ஒருவேளை சாப்பாடு கொடுத்தார் என்பதைத் தவிர, மற்றப்படி எந்த ஆள் அரவமும் இல்லாத சூழல். அப்போது எனது கடந்தகால வாழ்க்கையை நினைத்து பார்க்கத் துவங்கினேன். அப்படித் துவங்கியபோது-

உள்மன ஓட்டங்கள் வெள்ளம்போல் பிரவாகம் எடுத்து, எனது பெரியமனிதர் கரையை உடைத்து