பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிரபஞ்சன், கமலாலயன் ஆகியோர் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்துகிறவர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக ரெயில்களில், பேருந்துகளில், இதர பொது இடங்களில், என்னிடம் அறிமுகம் செய்து கொண்டு என் கதைகளை நினைவு படுத்தும், எண்ணற்ற சகோதர சகோதரிகள், தொழிலாள தோழர்கள் கடிதங்கள் எழுதும் வாசக பெருமக்கள் ஆகியோர் என் நெஞ்சை விட்டு நீங்காத நேயர்கள்.

சென்னை பிரசிடென்சி கல்லூரியில் தாவரவியல் பேராசிரியர் சுப்ரமணியன், நான் இடுகுறிக் கதைகளை எழுதுவதற்கு பல்வேறு விஞ்ஞானத் தகவல்களை தந்து கொண்டிருப்பவர். எனது அரசியல் சமூக அணுகுமுறையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரான ஆலடி அருணா, மாணவர் நகலக உரிமையாளர் சகோதரர் அருணாசலம், ஆகியோரிடம் தொடர்ந்து நான் மேற்கொள்ளும் எதிர்வாதம் என் கருத்துக்களை வலுப்படுத்திக் கொள்ளவும், மறுபரிசீலனை செய்யவும் உதவுகின்றன. தமிழ்ச் சான்றோரான சிலம்பொலி செல்லப்பன் அவர்கள், கவனகர் இரா. கனகசுப்புரத்தினம் ஆகியோர் மூலம் தமிழின் ஆழ்ந்த புலமை என்னை பிழைபட எழுதாமல் இருக்கவும், ஆங்கில வார்த்தைகளைத் தவிர்க்கவும், துண்டுகின்றன. எழுத்தாளர் கோவி. மணிசேகரன், என்னை “எழுதாமல் இருக்காதே இருக்காதே” என்று உசுப்பி விடுகிறவர். ‘ஏவிஎம்’ குடும்பத்தைச் சேர்ந்த நவீன சிந்தனையாளரான திரு. அருண். வீரப்பன் அவர்கள் வாழ்க்கையில் புதிய அனுகுமுறையைப் போதிப்பவர். இப்படி பலப்பல மனிதநேயர்கள், என் எழுத்தின் நோக்கத்தை அர்த்தப் படுத்துகிறார்கள்.

இறுதியாக ஒரே ஒரு வார்த்தை -

எனது முதல் சிறுகதை தொகுப்பான “குற்றம் பார்க்கில்” 1976-ஆம் ஆண்டு வாக்கில் திரு.அன்பரசனால் வெளியிடப்பட்டது. செங்கை மாவட்டத்தின் அப்போதைய ஆட்சித்தலைவரும், என் இனிய நண்பருமான காலம் சென்ற திவான் முகம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் அகிலன் அவர்கள் இப்படிப் பேசினார்.

“மற்ற எழுத்தாளர்களை, அவரைப்போல் எழுதுகிறார்.