பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

சு. சமுத்திரம் ☐

வும் விரும்பினேன். இந்த நாவல் பூம்புகார் நிலையத்தினர் மூலம் வெளியாவதாக இருந்தது. அப்போது, கிறிஸ்தவ இலக்கிய சங்கத்தின் முக்கியப் பொறுப்பில் இருந்த பேராசிரியர் பாக்கியமுத்து இந்த நாவலை சி.எல்.எஸ். தான் வெளியிடும் என்று சொன்னார். பல்வேறு நாவல்களை அவற்றின் ஒரு சில பலவீனங்களுக்காக பிரசுரிக்காமல் இருக்கும் பேராசிரியர், இப்படிச் சொன்னது என்னை நெகிழச் செய்தது. நானும் உடன்பட்டேன். பின்னர், பேராசிரியர் பாக்கியமுத்து மீண்டும் என்னுடன் தொடர்பு கொண்டு, உலகம்மை சேரிக்கு புறப்படுவதோடு நாவலை நிறுத்திவிடலாம் என்றும், அதற்குப் பிறகு அவள் சேரியில் சந்திக்கும் அனுபவங்களை உள்ளடக்கிய இரண்டு அத்தியாயங்கள் தேவை இல்லை என்றும் கூறினார். அதேசமயம் முடிவைப் பெருந்தன்மையாக என்னிடமே விட்டுவிட்டார். நானும் இணங்கினேன்.

அரங்கேற்றமும், அடிதடி நிலைமையும்

இந்த நாவலை அரங்கேற்றிய பெருமையும் பேராசிரியர் பாக்கியமுத்துக்கே உரியது. சி.எல்.எஸ். நிறுவனத்தில் இதில் 300 பிரதிநிதிகளே விற்பனையாயின. இது நூலகங்களிலும் வைக்கப்படவில்லை. அப்படியிருந்தும், ‘சு. சமுத்திரம் என்றால் ஒரு கோட்டுக்கு வெளியே’ என்ற பெயர் ஏற்பட்டது. பேராசிரியர் பாக்கியமுத்து கிறிஸ்துவ இலக்கிய சங்கத்தில் ஆண்டுதோறும் நடத்திவந்த நண்பர் வட்டம், இலக்கிய ஆய்வு ஒன்றில் இந்த நாவலை பிரகடனப்படுத்தியதும், ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கச் செய்ததும் இதன் வெற்றிக்கு ஒரு - ஒரே -