பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

சு. சமுத்திரம் ☐

களில் கேட்ட சங்கதிகளில் இந்த பண்டாரத்தை புகுத்தி கதைகளாக்கினேன். இவற்றில் முக்கால்வாசி நடந்தவை.

பண்டாரம் படுத்தும் பாடு

ஒரு அலுவலகத்தில் ஒரு குமாஸ்தா, ஆபீஸ் பணத்தை கையாடுவது வழக்கம். ஒரு நாள் திடீரென்று மேலதிகாரி பணத்தை சரிபார்க்க வந்தார். அந்த கிளார்க்கிடம், பணப் பெட்டியில் இருக்க வேண்டிய அளவிற்கு பணம் இல்லை. அதிகாரியோ, முன்னால் வந்து நின்று விட்டார். என்ன செய்வது என்று புரியாமல் விழித்த மோசடி ஆசாமிக்குள் ஒரு அதி மோசடி எண்ணம் உதயமானது. பெட்டியைத் திறந்து ரூபாயை அவர் முன்னால் கொட்டி “இந்தாருங்கள் சார் எண்ணுங்கள்” என்றார். அதிகாரி எண்ணிக்கொண்டிருக்கும் போதே, பாத்ரும் போய் வருவதாகச் சொல்லி பத்து நிமிடம் கழித்து வந்தார். பணத்தை எண்ணிய அதிகாரி திரும்பி வந்தவரிடம் கடு கடுப்பாக “பணம் குறைகிறதே” என்று கேட்ட போது, அந்த ஆசாமி “நான் வைத்து விட்டுப் போனேன். நீங்கள்தான் எடுத்திருப்பீர்கள்” என்று ஊரைக்கூட்டி சத்தம் போட்டான். மோசடியைக் கண்டுபிடிக்க வந்த அதிகாரி மோசடிக்காரனாக சித்தரிக்கப்பட்டார். அந்த ஆசாமி களவாணி என்று தெரிந்தாலும் மேலதிகாரிகளால் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. இனிமேல் பணத்தை சோதிக்கச் செல்பவர்கள் சம்பந்தப்பட்ட கேஷியரைத்தான் எண்ணச் சொல்ல வேண்டும். சோதிப்பவர் சும்மா இருக்க வேண்டுமே தவிர, காசு மீது கை வைக்க கூடாது என்ற ஒரு ஜி-ஒ (அரசாங்க உத்தரவாக) வெளியானது. அந்த ஆசாமி