பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

சு. சமுத்திரம் ☐

பெண் இறந்து விட்டாள். தாய் வீட்டில் இருந்த அவளை வெளியூரைச் சேர்ந்த கணவன் விஷம் வைத்துக் கொன்று விட்டதாகக் கேள்வி. அந்த பெண்ணின் உற்றார் உறவினர்கள், அவள் கணவனை எதிர்பார்த்து நின்றார்கள். அவனையும் வெட்டி, அவளுக்கு வெட்டிய குழியிலேயே போட்டுவிடுவது என்பது முடிவு. இந்தக் கணவனின் பெரியப்பா மகள், அந்த ஊரில் திருமணமானவள். அவளுக்கு விஷயம் புரிந்துவிட்டது. அண்ணன்காரன் சற்றுத் தொலைவில் வரும்போதே “அடே அற்பப்பயலே, எங்க மதனியை விஷம் வச்சாடா கொன்னே இங்கே வா, உன்னையும் வெட்டி புதைக்கப் போறோம் பாரு” என்று வாயிலும் வயிற்றிலும் அடித்தபடி அவனை நோக்கி ஓடினாள். உடனே அவனும் உயிர் பிழைக்க ஓடிவிட்டான். ஓடி தப்பித்து விட்டான். இந்தப் பெண் தனது பெரியப்பா மகனை இப்படி சாமர்த்தியமாக தப்பிக்க வைத்ததாக ஊரார் சொன்னபோது, அவளோ உணர்ச்சி வசப்பட்டு, தார்மீகக் கோபத்தில், “அப்படிச்” செய்ததாக சொல்லிப் பார்த்தாள். யாரும் அவளை நம்பவில்லை-நம்ம முடியாதுதான். அந்தப் பெண்ணை, இறந்து போன பெண்ணின் அண்ணனாக மாற்றி, ‘ஒரு சந்தேகத்தின் நன்மை’ என்ற ஒரு சிறுகதையை ‘விகடனி’ல் எழுதினேன்.

கதிர்வராத பயிர்கள்

நான் கல்லூரியில் படிக்கும் போது ஊரில் விடுமுறைக்குப் போவேன். ஒரு இளம்பெண் லேசாக சிரிப்பாள். அவள் எனக்கு துரத்து முறைப்பெண்தான். எனக்குப் பயம். படிப்பு போய் விடக் கூடாதே என்ற