பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

53

எழுதி, அவள் அண்ணன் மகனிடம் கொடுத்துவிட்டு ஓடி விட்டேன். மத்தியானம் மகிழ்ச்சியோடு எனது தங்கை வீட்டுக்குப்போனேன்; பாவி கெடுத்தாள். அண்ணன் மகனை இடுப்பில் வைத்துக் கொண்டே, இப்போதும் நின்றாள்; ஆனால் டயலாக்தான் வேறு. “ஏண்டா கரிமூஞ்சி. உன் மனசிலே என்னடா நினைச்சுக்கிட்டே... பெரிய மன்மதன்னு நினைப்பா? என் அண்ணன் வரட்டும். ராத்திரி வரட்டும் அப்ப இருக்கு வேடிக்க” என்று கூசாமல் சொன்னாள். நான் வெலவெலத்துப்போனேன். அவள் அண்ணன் வஸ்தாது; நல்ல மனிதர் என்றாலும், தனது குடும்பத்துப் பெண்ணைத் தவறாக அணுகுபவர்களை உண்டு, இல்லை என்று பார்க்கக்கூடியவர். ஒரு தடவை ஒரு ரவுடியை அவர் அடியடி என்று அடித்ததை என் கண்ணாலேயே பார்த்தேன். பயந்துபோன நான் ஓடினேன், ஓடினேன் எனது சித்தப்பா வீட்டு ஓரத்திற்கே ஓடினேன். அங்கே சித்தப்பாவும் இல்லை; சித்தியும் இல்லை; சோறும் இல்லை, கஞ்சியும் இல்லை. இரண்டு நாட்கள் ரொட்டி, பிஸ்கட்களைத் தின்றுகொண்டு வயிற்றைக் காத்தேன். மூன்றாவது நாள் என் தங்கை வந்தாள். நான் கிடந்த கோலத்தைப் பார்த்துவிட்டு, என்னை வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அழைத்தாள். எனக்குப் பசி ஒரு பக்கம்; பயம் ஒருபக்கம். அவளை அனுப்பிவிட்டு, ராத்திரி பத்து மணிக்கு, தலையில் முக்காடு போடாத குறையாக தங்கை வீட்டிற்குப் போனேன். “அவள்” பார்க்கமாட்டாள் என்ற நம்பிக்கையில், சாப்பிடப்போனேன், அவ்வளவுதான். சண்டாளி வந்துவிட்டாள். தூங்கி வழிந்த அண்ணன் மகனை தோளில் போட்டுக் கொண்டு “ஏண்டா