பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

சு. சமுத்திரம் ☐

பயந்திட்டியா? உன்னெ எப்படிடா காட்டிக்கொடுப்பேன்... சோமாறி” என்று செல்லமாகத் திட்டினாள். எனக்குப் போன உயிர் வந்தது. ஆனாலும் அவளைப் பார்க்கப் பிடிக்கவில்லை. சொன்னதே சொன்னாள். “கறுப்பா” என்று சொல்லியிருக்கலாம். கரிமூஞ்சி என்றல்லவா சொன்னாள்... அவளுக்கு ஒரு பெரிய கும்பிடாக போட்டேன். அதிலிருந்து அவளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அந்த ஆதங்கத்தில், அவள் எப்போதாவது “அண்ணனிடம் சொல்லட்டுமா” என்று மருமகக் குழந்தையிடம் பேசும்போது, நான் செயற்கைத்தனமாகச் சிரிப்பேன். இவளையும், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வடசென்னையில் சந்தித்தேன். ஆனால் பூக்காரப் பெண்ணிடம் கேட்டது மாதிரி இவளிடம் கேட்கவில்லை. அவளும் எதுவும் நடக்காதது போல் ஒதுங்கிக் கொண்டாள். இந்த நிகழ்ச்சியை, மையமாக்கி குமுதத்தில் “அண்ணன் வரட்டும் சொல்லுகிறேன்” என்று ஒரு சிறுகதை எழுதினேன்.

வளர்ப்பு மகள்

வடசென்னையில் பல்வேறு குடித்தனங்களைக் கொண்ட ஒரு வீட்டில் வாழ்வது என்பது, நரக வேதனை. அதிலும் வீட்டுக்காரியின் அடாவடித்தனம் சிலசமயம் அசிங்கமாகவே இருக்கும். எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, மின்சார வெளிச்சத்தை அணைப்பாள். உழைக்கும் மக்கள் அந்த இரவில் ஏதாவது உல்லாசமாகப் பேசிவிட்டால் போதும். “என்ன பேச்சு? தூக்கத்தைக் கெடுக்கிற பேச்சு” என்பாள். காலையில் குழாயடியில் ஏழைப்