பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எனது கதைகளின் கதைகள் ☐

55

பெண்கள், தண்ணீர் பிடித்துவிட்டு, வெளியே வேலைக்குப் போவதற்காகத் துடிப்பார்கள். ஒவ்வொருத்தியும் குடங்களை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு படியாக நிற்பாள், குடத்தை குழாய்க்குக் கீழேயும் வைத்துவிடுவாள். அப்போது வருவாள் வீட்டுக்காரம்மா. எல்லா குடங்களையும் வேலைக்காரியை வைத்து, வெளியே அனுப்புவாள். அரைமணி நேரம், இவள், குடம் குடமாகப் பிடிப்பாள். இவள் போய் விட்டு, ஏழைப்பெண்ணின் குடம் வரும்போது, குழாய் பெருமூச்சுவிடும். சில வீடுகளில் வீட்டுக்காரிகள், வாடகைப் பெண்களை மாவு ஆட்டச்சொல்வதும் உண்டு. வீட்டுக்காரிகள் ரேடியோ போட்டால், அது இசை. வாடகைக்காரிகள் ரேடியோ போட்டால், அது கூச்சல், இப்படி எல்லா வீடுகளிலும் பெரும்பாலாக வீட்டுக்காரி அம்மாள்கள், முதலாளித்துவ தாண்டவ மாடுவதுண்டு. இவர்களையும் ஆங்காங்கே அடக்குகின்ற வாடகை வீட்டுக்காரிகளும் உண்டு. இந்தப் பின்னணியில் ஒரு வீட்டுக்காரியின் அட்டுழியத்தைப் பற்றி தாமரையில் குடித்தனம் என்று ஒரு சிறுகதை எழுதினேன். ‘வளர்ப்பு மகள்’ என்ற நாவலில் நான் வசித்த வீட்டில், இட்லி சுட்டு விற்கும் ஆயா என்னை சொந்த தம்பிபோல அனுமானித்த ஏழைப்பெண்கள், என்படிப்பை பெரிய படிப்பாக நினைத்து பிரமித்துப் பார்த்த ரிக்க்ஷாக்காரர்கள், ஆகியோரை அந்த நாவலில் பாத்திரங்களாக்கினேன்.

யோகி ரங்கசாமி செட்டியார்

ந்த ரிக்க்ஷாக்காரர்கள், இட்லி விற்கும் ஆயாக்கள், மூட்டைச் சுமப்பவர்கள், பூக்காரர்கள் இவர்கள்