பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

57

பேசுகிறது. உன் சித்தி மூன்று மாதங்களில் இறந்து விடுவார்” என்று எனக்கு மட்டுமே ரகசியமாச் சொன்னவர். ஜோதிடத்தில் நிபுணர், சாமுத்திரிகா லட்சணத்தை நன்கு தெரிந்தவர். ஒரு ஆளைப் பார்த்தே, அவரது சிரிப்பு, உட்காரும் விதம் ஆகியவற்றை வைத்து கணித்துவிடுவார். அதோடு, பிரணாயத்தின் மூலம் “வாசி” என்ற கலையைக் கற்று, எதிர்காலத்தைக் கணிப்பவர். நான் கல்லூரியை விட்டு வந்ததும், தூசியும், துரும்பும் நிறைந்த அந்த அறைக்குள் இவரோடு பேசிக் கொண்டே இருப்பேன். எனது எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்றும், நான் எழுத்தாளனாக மாறுவேன் என்றும் குறிப்பிட்டார். பல்வேறு காரணங்களால் படிப்பை இடையில் நிறுத்தப்போகும் போது, இவர்தான் அவ்வப்போது ஆறுதல் கொடுத்தார். ஆகையால் எனது கதாபாத்திரங்கள் தரையில் பெருவிரலால் கோலம் போடுவதும், கனைத்துக்கொண்டே சிரிப்பதுமாக எழுதுவதும், மூக்கு சப்பையாக இருப்பதாக குறிப்பிடுவதும், நெற்றி விசாலமாக இருப்பதாக எழுதுவும், அல்லது கரங்கள் குவியும் போது விரல்கள் அதிகமாக ஒட்டிக் கொள்வதாய் வருணிப்பதும், ஒருவித சாமுத்திரிகா லட்சண அடிப்படையில் அந்தப்பாத்திரங்களின் தன்மைக்கேற்ப எழுதப்பட்டவை. ஏனோதானோ வர்ணனைகள் அல்ல. இவரது பாதிப்பில் பல கதைகள் எழுதியிருக்கிறேன்.

ஒரு துரோகியின் விசுவாசம்...

இவரிடம் பலர் வருவார்கள். வியாபாரிகள், காதலில் தோல்வியுற்றவர், நோயாளிகள், நோய்