பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

சு. சமுத்திரம் ☐

இருப்பதாக நினைக்கிறவர்கள். இப்படி எத்தனையோ பேர் வருவார்கள். இவர்களில் ஒரு பெண் சலவைத் தொழிலாளி. அப்போது அவருக்கு 50 வயதிருக்கும். ‘சின்ன வீடு’ செட்டப் செய்த தனது கணவர், மீண்டும் தன்னிடம் வருவாரா என்று இந்தப் பெண், அடிக்கடி அவரிடம் கேட்பாள். அதோடு, எனது துணிமணிகளை இந்தப் பெண்தான் சலவை செய்து கொடுப்பாள். இரண்டு மூன்று உருப்படிகள் மட்டும் வைத்திருந்த எனக்கு, தேவைப்படும் போதெல்லாம், ஸ்பெஷல் சலவை செய்து ‘உருப்படியாக’ கொடுத்த பெண்மணி இவள்; கிட்டத்தட்ட இவளின் வீட்டில், நான் ஒரு உறுப்பினனாகவே மாறிவிட்டேன். இவளுக்கு ஒரு இளம் மருமகள்; கறுப்பாக இருந்தாலும், கற்சிலை போன்ற தோற்றம். எனக்கு சகோதரிக்குச் சமமானவள். பல தடவை இவளும், ஒரு வயதான மூதாட்டியும், அக்கம்பக்கம் பார்த்தபடி காரசாரமாகப் பேசிக் கொள்வதையும், கடைசியில் அந்த மூதாட்டி கண்ணீர் விட்டுக் கொண்டே போவதையும் பார்த்திருக்கிறேன். அப்படி ஒரு தடவை அந்த மூதாட்டி போனதும், அந்தப் பெண்ணிடம் நான் விவகாரத்தைக் கேட்டேன். முதலில் தயங்கிய அவள், பிறகு ஒப்பித்தாள். அந்தக் கிழவி இவள் தாயாம். இந்தப் பெண்ணுக்கு பத்து வயது வந்த போது, யாரோ ஒரு ‘கஸ்மாலத்தை’ இஸ்துகிட்டுப் போயிட்டாளாம். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, ஒராண்டுகாலமாக மகளைப் பார்க்கிறாளாம். இப்போது இயலாமையாகி விட்டதால், மகள் தன்னைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மன்றாடுகிறாளாம். இந்தப் பெண்ணும் அதற்கு சம்மதித்துவிட்டாளாம். ஆனால் அந்தக் கிழவியோ தன்னை