பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

61

வரும் ஒருவர் அம்பத்தூரில் சைக்கிள் பாக்டரியில் வேலை பார்த்தவர். அந்தப் பையனுக்கு அதே பாக்டரியில் வேலை கிடைக்க ஏற்பாடு செய்தார். நிர்வாகமும் இணங்கியது; ஆனால் முக்கிய பிரமுகர் ஒருவரிடம் தான் கான்டக்ட் சர்டிபிகேட் வாங்கி வரவேண்டும் என்று வற்புறத்தியது. ரெங்கசாமி செட்டியாரும் தனது தூரத்து உறவினரான அதே பகுதியில் குடியிருக்கும் அந்த அரசியல் பிரமுகரிடம் விவகாரத்தைச் சொன்னார். அவர், எல்லா விவரங்களையும் கேட்டுக் கொண்டு, ‘நாளை வா’ என்றார். ‘நாளை’ வரவேயில்லை. இவர் விசாரித்துப் பார்த்தபின், அந்தப் பிரமுகர் சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு போன் செய்து, இந்தப் பையனுக்குப் பதிலாக தனக்குத் தெரிந்த ஒருவனை வேலையில் நியமிக்கும்படி கேட்க, நிர்வாகமும் அரசியல் செல்வாக்குப் பெற்ற அவரது ஆளுக்கு வேலையைக் கொடுத்து விட்டது. கொதித்துப்போன நமது செட்டியார், அந்த பிரமுகரின் வீட்டிற்கு முன்னால் போய் நின்று கையில் மண்ணை வைத்துக் கொண்டு மூன்று தடவை ஊதினார். அதன் விளைவு ஆறுமாத காலத்திற்குள், அந்தப் பிரமுகர் கடுமையான சிக்கலில் சிக்கி அதன் பாதிப்பு வாழ்க்கை முழுவதும் இருக்கும் அளவுக்கு ஆகிவிட்டது. அதற்குப் பிறகு, அவர் அரசியலிலும் எடுபடவில்லை. இந்தச் செட்டியார் பின்னால் வருத்தப்பட்டாலும், முன்னால் நடந்ததை மாற்ற முடியவில்லை. இதை வைத்தும் ஒரு சிறுகதை எழுதினேன். ஆனால் ஜாக்கிரதையாக சாப மிட்டதையோ, அதன் விளைவையோ குறிப்பிடவில்லை. கதையின் நோக்கம் வல்லமை வாய்ந்த ஒருவன் எளியவனுக்கு கிடைக்கும் வேலையையும்