பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

சு. சமுத்திரம் ☐

எப்படித் தட்டிப்பறிக்கிறான் என்பதைச் சொல்ல வேண்டும் என்பதே. மூட நம்பிக்கை மாதிரி தோன்றக் கூடியதை நான் குறிப்பிட விரும்பவில்லை.

இந்தப் பையன், ஒரு முழுக் குடிகாரனாக வாழ்க்கையை, தொலைத்துவிட்டான். ‘குடி’ ஒரு நோயின் அறிகுறியே தவிர, நோயல்ல’ என்பதைச் சொல்வதற்காக அந்தக் கதைக்கு ‘ஒரு நோயின் அறிகுறி’ என்று வைத்தேன்.

ஒரு நாள் போதுமா?

கல்லூரி படிப்பை முடித்த பிறகு, அங்குமிங்குமாகச் சுற்றிவிட்டு, நான் மத்திய அரசின் திட்டம் என்ற பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக வேலைபார்த்தேன். அப்போது.... கீதா என்ற தொழிற்சங்க தோழியரின் பரிச்சயம் கிடைத்தது. இந்தக் கீதா, மதுரையில் வசித்த பிரபல மார்க்சீய தத்துவவாதியும், கம்பராமாயண இலக்கயவாதியுமான அறிஞர் ராமகிருஷ்ணனனின் மகள், பாட்டாளி மக்களுக்காக, கல்லூரியில் ஆசிரியை வேலையையும் ராஜினாமா செய்து விட்டு, காதலித்து கைபிடித்த கணவனுடன் கட்டிடத் தொழிலாளர் சங்கத்தைத் துவக்கினார். கீதா, நான் இந்தத் தொழிலாளர்கள் பற்றி ஒரு நாவல் எழுத வேண்டும் என்று கேட்டார். அவருடன் பல்வேறு சேரிப்பகுதிகளுக்குச் சென்றேன். தேனாம்பேட்டை, சூளை, ஆகிய விடங்களில் உடலுழைப்பை விற்பதற்காக மண்வெட்டி கூடைகளோடு, நிற்கும் ஆண்களையும், பெண்களையும், அவர்களது அவல நிலையையும் பார்த்தேன். சேரிப் பகுதிகளில் தக்க கழிப்பிடம்