பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

63

இல்லாததால், பெண்கள், எல்லாவற்றையும் அடக்கி அடக்கியே சிறுநீரகக் கோளாறுக்கு உட்பட்ட பல சம்பவங்கள் தெரிந்தன. காண்ட்ராக்டர்களும், மேஸ்திரிகளும், இவர்களைச் சுரண்டும் விதங்களும், விவரங்களும் கிடைத்தன. மேலே இருந்து கீழே விழுந்தால் இவர்களுக்கு நஷ்ட ஈடு கிடையாது. நிரந்தரத் தொழிலாளர்களைப்போல் இவர்களுக்கு எந்தவித வசதியும் இல்லை. மழை வந்துவிட்டால், இவர்கள் பிழைப்பிலே மண். ஒரு தாய், இருந்த உணவில் முக்கால் வாசியை தான் உண்டுவிட்டு, கால் வாசியை மட்டுமே குழந்தைக்குக் கொடுத்தாள். குழந்தையோ பசி பொறுக்க முடியாமல் கத்துகிறது. அந்த தாயிடம் நான் கேட்டேன். அவள் சொன்னாள் இப்படி-

“என் வவுறு கொஞ்சம நிறைஞ்சாத்தானே சாமி, வேலை பாக்கலாம், இல்லாட்டி, மயங்கி விழுந்திட்டா இந்தக் குளந்தய யார் கவனிக்கிறது? பொறுத்துக் கோடா ராசா... சாங்காலமா கூலி வாங்கினு வந்து அம்மா ஒனிக்கி நல்ல சோறு போடுறேன்... மசால் தோச வாங்கித்தர்றேன்!”

இப்படிச் சொல்லிவிட்டு, அந்தப்பெண் எதுவுமே நடக்காதது போல் போய்க் கொண்டிருந்தாலும், அவள் அழுதுகொண்டிருந்த தன் ஆறு வயது மகனைக் கண் கலங்கத் திரும்பித் திரும்பிப் பார்த்ததையும் நான் பார்த்தேன். எவ்வளவு பெரிய யதார்த்த உண்மை இது! எல்லா உணவையும் பிள்ளைக்குக் கொடுத்து விட்டு, வயறு காய்ந்து, மாடியிலிருந்து மயங்கி விழுந்து தன்னோடு குழந்தையையும் சாகடிக்கும் ஒரு தாயை விட, இந்த யதார்த்தமான தாய் எனக்கு ரொம்பப்