பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

சு. சமுத்திரம்

பிடித்து விட்டாள். இப்படி எத்தனையோ நெஞ்சை உருக்கும் சம்பவங்கள். இவற்றை வைத்து “ஒரு நாள் போதுமோ” என்று ஒரு குறு நாவல் எழுதினேன். நயனதாரா என்ற பத்திரிக்கையில் மாத நாவலாக இது வெளி வந்தது. தாமரையில் நான் சொன்ன இந்தத் தாயை மட்டும் மையமாக வைத்து ‘மண்சுமை’ என்ற சிறுகதையும் எழுதினேன்.

பொதுவுடமை தத்துவம் தந்தவர்

யோகி ரெங்கசாமி செட்டியாரைப் பற்றியும் அவர் என் எழுத்துக்களில் ஏற்படுத்திய தாக்கம் பற்றியும் விவரித்திருந்தேன். ஆனால் அவர் சொல்வதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அதே காலக் கட்டத்தில் இன்னொரு நட்பு கிடைத்தது. நான் வசித்த குடித்தன வளாகத்தில், ஒரு தையல் தொழிலாளி இருந்தார். என்னைவிட பத்து வயது அதிகமாக இருக்கலாம். அந்த வளாகத்திற்குள் வீட்டுக்காரி அடாவடியாகப் பேசும்போது, எல்லோரும் குமுறுவார்கள், ஆனால் அவரோ லேசாகச் சிரிப்பார். இது மாதிரி பேச்சுக்களும் ஏச்சுக்களும், எதிர்பார்க்க கூடியதுதான் என்பதுபோல, புன்முறுவல் செய்வார். இதை நெடுநாட்களாகக் கவனித்துக் கொண்டிருந்த நான், ஒரு தடவை அவரை அணுகினேன். அவர் மூலம் ஒரு மாபெரும் தத்துவத்தையே அணுகினேன் என்று சொல்லலாம். நான் அவரது சிரிப்பைப் பற்றி கேட்டதற்கு “அந்த அம்மாவிற்கு முதலாளித்துவ குணம். அந்தக் குணம் உள்ளவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்” என்பார். தெருத் திண்ணைகளில் ரவுடிகள் கத்தி கம்புகளோடு, அட்டுழியமாக அரட்டை அடிப்பதைப் பார்த்துவிட்டு,