பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

சு. சமுத்திரம் ☐

மாணவர் தலைவர்களில் நானும் ஒருவன். அதுமட்டுமல்ல. திராவிட முன்னேற்றக் கழக மாணவர்கள் 99 சதவிகிதம் இருந்த சர் தியாகராயா கல்லூரியில் நான் தமிழ் மாணவர் மன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இப்போதைய தலைவர்களான திரு என்.வி.என்.சோமு, திரு கே.ஏ.கிருஷ்ணசாமி திரு பெ.சீனிவாசன், விசுவநாதன் முதலியவர்கள் பல்வேறு பேச்சுப் போட்டிகளில் என்னோடு கலந்து கொண்டவர்கள். இப்படி நான் வெற்றிகளைக் குவிப்பதற்கு ரங்கசாமி செட்டியார் ஒரு காரணம் என்றால், இந்த தையல் தொழிலாளியும் இன்னொரு இணையான காரணமாகும். நான் எழுதிய ‘சத்திய ஆவேசம்’ என்ற நாவலில், இந்த தையல் தொழிலாளியை ஒரு ப்ரூப் ரீடராகச் சித்தரித்து, அவர் எப்படி மார்க்சீய தத்துவத்தை மனம் குமுறிப்போகும் கதாநாயகனுக்கு உணர்த்தி, தெளிய வைக்கிறார் என்று எழுதியிருந்தேன். துரதிருஷ்டவசமாக இந்தத் தொழிலாளித் தோழர் ஒரு குடும்பச் சிக்கலில் மாட்டி, நான் அவருடன் பரிச்சியப்பட்ட மூன்று மாத காலத்திற்குள்ளே எங்கேயோ போய்விட்டார். இப்போது அவர் எங்கே இருக்கிறாரோ, எப்படி இருக்கிறாரோ. பார்க்க ஆவலாக இருக்கிறது. இவருடைய தாக்கத்தால் தான் தாமரை, செங்கோல், (அப்போது செம்மலர் இல்லை) ஜனசக்தி ஆகிய வித்தியாசமான பத்திரிகைகளைப் படித்து, சிந்தனை நோக்கைத் தீட்டிக் கொண்டேன்.

சுகமாகிப் போன வெயில்

இந்தச் சந்தர்ப்பத்தில், பக்கத்து வீட்டில் முப்பது வயது பெண் ஒருத்தி இருந்தாள். கணவன்காரன்