பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

சு. சமுத்திரம் ☐

பக்கமோ விவரமே தெரியாத நிர்வாக அதிகாரி. சஸ்பென்டு ஆனவர் பக்கமோ சட்ட திட்டங்களைக் கரைத்துக் குடித்த அண்டர் செக்கரட்டரி; நான் அறிவுரை கேட்கப்போன அலுவலகங்களில் எல்லாம் “உங்களுக்கு எதுக்கு சார் வம்பு... பேசாமல் அந்த ஆசாமிகிட்ட மன்னிப்புக் கேட்டு அவரை வேலையில் சேர்த்து விடுங்க.” என்று உபதேசங்கள். நானும், சஸ்பென்டு ஆனவரை ஒருநாள் கூப்பிட்டு “நடந்ததற்கு வருத்தம் தெரிவித்தால் உன்னை வேலையில் சேர்க்கிறேன்” என்று சொன்னேன். அந்த ஆசாமியோ, “பார்க்க வேண்டிய இடத்தில் பார்த்துக்கலாம்” என்று சொல்லிவிட்டு நிற்காமல் போயவிட்டார். ஒருவேளை அவர் நின்றிருந்தால் “இரண்டு பேருமே வருத்தம் தெரிவித்துக் கொள்ளலாம்பா” என்று சொன்னாலும் சொல்லி இருப்பேன்.

நாயர் பிடித்த புலிவால்

இந்தச் சமயத்தில், ஒரு அறிவுரையாளர் ஒரு வெடிகுண்டைப் போட்டார். இப்படித்தான் ஒரு பியூனை அவர் சஸ்பென்டு செய்தாராம். இந்த சம்பந்தப்பட்ட பியூன், இரவில் குடித்து விட்டு, அலுவலகம் வந்து, வாட்ச்மேனை அடித்து, பல்லை உடைத்து விட்டாராம். ஆனால் விசாரணையில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று நிரூபிக்கப்பட்டதாம். காரணம் பல்லுடைபட்ட ஆசாமி, இன்னொரு பல்லும் உடையக்கூடாது என்பதற்காக தன்னை அந்தப் பியூன் தாக்கவில்லை என்றும் சத்தியம் செய்து விட்டாராம். இதனால் சஸ்பென்டு ஆன பியூன் சகல மரியாதைகளுடன் வேலையில் சேர்க்கப்பட்டாராம். இப்போது