பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

75

எனக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கும் இந்த அதிகாரியின் பல்லை உடைக்கப் போவதாக பகிரங்கமாக சவால் விடுகிறாராம். இதை, பயந்தபடியே என்னிடம் தெரிவித்த அந்த அதிகாரி, “எது செய்தாலும் சஸ்பென்டு மட்டும் செய்யக்கூடாது சார்”. என்றார். அந்த சமயத்தில் என்னுள் அதிகாரி என்பவர் இறங்கி, எழுத்தாளன் என்பவன் மேலோங்கினான்.

இந்தப்பல்லுடைப்பு சமாச்சாரங்களை வைத்து ஒரு கதை எழுதலாமே என்று தோன்றியது. உடனே பண்டாரத்தின் ஞாபகம் வந்தது. அவனை சஸ்பென்டு ஆன பல்லுடைத்த பியூனிற்கு டிபென்ஸ் அஸிஸ்டன்டாகப் போட்டேன். பண்டாரம், பல்லுடைபட்ட வாட்ச்மேனைப் பார்த்து “ஒரு பியூன் அடித்த அடியிலேயே உனக்குப் பல் உடைகிறது என்றால், பழைய ராணுவ வீரனான நீ எப்படிய்யா. ஆபீச காவல் காப்ப? இதுக்காகவே உன்னை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்” என்று ஒரு போடு போட்டவுடனேயே, பல்லுடைபட்டவன் பயந்து விடுகிறான். பிறகு பண்டாரம் சம்பந்தப்பட்ட அந்தப் பியூன் குடித்துவிட்டு வந்தான் என்ற குற்றச்சாட்டையும் பொய்யாக்குகிறான். அவன் குடித்துவிட்டு வந்தான் என்பதற்கு ஆதாரம், அந்த பியூன் “ஆடுவோமே... கள்ளு பாடுவோமே...” என்று அலுவலகம் வந்து தள்ளாடிய படியே பாடியதுதான். பண்டாரம் சம்பவம் நடந்த நாள் சுதந்திர தினம் என்பதை அறிந்து, பல்லுடைத்த பியூன் செக்கிழுத்த சிதம்பரனாரையும், இதர தியாகிகளையும் நினைத்து எல்லாவற்றிற்கும் மேலாக பராதியின் நினைவு பொங்கி ‘பள்ளு பாடுவோமே’..