பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

சு. சமுத்திரம் ☐

நிலவுகிறது. இதற்கு அலிய சந்தானம் என்று பெயர். நான், தொழில் நிமித்தம் எனது மங்களுர் பப்ளிசிட்டி ஆபீசருடன் குந்தபுரா என்ற பகுதிக்குப் போனேன். பின்னர் மூகாம்பிகை கோயிலுக்குப் போய்விட்டு, அதற்கு அருகே ஒரு மலைப் பகுதியில் திரைப்படம் காட்டப் போனோம். அங்கே ஒரு இளம் பெண்ணிடம் “உன் புருஷன் எங்கே இருக்கிறார்” என்று அரைகுறை கன்னடத்தில் கேட்டேன். அவள் உடனே “அவர், அவர் வீட்டில் இருக்கிறார். நான் என் வீட்டில் இருக்கிறேன். உனக்கு என்ன வந்தது” என்றாள். ஒரு வேளை, இது விவாகரத்து கேஸாக இருக்கலாம் என்று நினைத்து, இன்னோரு பெண்ணைக் கேட்டேன். அவளும் இதே பதிலைத்தான் சொன்னாள். பிறகு, எனது பப்ளிசிட்டி ஆபீசர் விளக்கினார். அந்தப் பகுதியில் கேரளத்தில் நிலவிய மறு மக்கள் மானியம் சகல பலவீனங்களோடும் நிலவி வருவதாகக் குறிப்பிட்டார். இதன்படி ஒருவன், ஒருத்தி கழுத்தில் தாலியைக் கட்டிவிட்டு தன் வீட்டுக்குப் போய், சகோதர சகோதரிகளோடு வாழ்வான். எப்போதாவது மனைவியின் வீட்டுக்குப் போய், அவளுக்கு ஒரு குழந்தையை கொடுத்துவிட்டு வந்துவிடுவான். இந்தக் குழந்தைகளுக்கு அப்பா பரிச்சயம், அமாவாசை - ஆடி மாதிரி. தாய் மாமாக்கள், அத்தைகள் இல்லாமல் வாழும் அவஸ்தையைப் பார்த்தவர்கள். இந்தப் பெண்களின் முகங்களில் ஒரு வெறுமை இருப்பதை கண்டேன். கேரளத்திலாவது கணவன், மனைவி வீட்டில் வாழ்ந்தான். ஆனால் இங்கேயோ கணவனும், மனைவியும் வருடத்தில் நான்கைந்து முறை மட்டுமே சந்திப்பார்கள். இந்தப் பெண்களிடம் பேசிப்பார்த்ததில், அவர்