பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

81

கள் இந்த முறையினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதும் இதனை வெறுப்பதும் புரிகிறது.

இந்த அவல நிலையை, பெங்களூர் டி.வி. நிலைய இயக்குநர், வானொலி நிலைய இயக்குநர், பிரச்சாரத் துறை உட்பட பல உயர் அதிகாரிகளைக் கொண்ட பப்ளிசிட்டி ஒருங்கிணைப்பு கமிட்டியிடம் தெரிவித்து, இதற்காக ஒரு பிரச்சார இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்று சொன்னேன். யாரும் அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அப்படி ஒரு முறை இல்லை என்று அடிக்காத குறையாகத் தெரிவித்தார்கள். இந்தப் பெண்களின் நிலைமைப் பற்றி நான் தாமரையில் விரிவாக ஒரு சிறுகதை எழுதியதைத்தவிர வேறு எனக்கு எதுவும் செய்யத் தெரியவில்லை.

மலைக்கதை

மூகாம்பிகை கோவில், பயங்கரமான மலைப்பகுதிக்குள் இருக்கிறது. இதற்கு அருகே உள்ள ஒரு மலைக் கிராமத்திற்குப் போனேன். காதுகளிலும், கைகளிலும் பெரிய பெரிய ஈய நகைகளைப் போட்ட பெண்களும், கிழிந்த வேட்டி கட்டிய ஆண்களுமாக இருந்த கிராமம். இங்கே புதிய தலைமுறைப் பெண்கள் பாவாடை தாவணியை கஷ்டப்பட்டு அணிந்து வர முயற்சி செய்கிறார்கள். இந்தக் கிராமத்தில் ஒரு இளம்பெண் கைக்குழந்தையோடு கண்ணீரும், கம்பலையுமாக இருந்தாள். அவள் கணவன் குடித்து, குடித்தே, இறுதியில் தன் உயிரை தானே குடித்து விட்டான். கூட்டுக் குடும்பத்தில் வாழும் இந்தப்