பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

சு. சமுத்திரம் ☐

பெண், சந்தோஷமாக இருப்பதாக மற்றவர்கள் சொன்னபோது இவளும் தலையாட்டினாள். ஆனால் தனிமையில் இவளைச் சந்தித்துக் கேட்டபோது, இவள் மறுமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும், ஆனால் மலை ஜாதி தலைமை அதற்கு மறுப்பதாகவும் பன்னிப்பன்னிச் சொன்னாள். மெஜாரிட்டியின் சர்வாதிகாரம் எப்படிப் போகும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இவளையும் பின்னணியாக வைத்து ஒரு கதை எழுதினேன். அது குமுதத்தில் பிரசுரமானது.

தாய்மைக்கு வறட்சியில்லை

வட கர்நாடகத்தில், நான் ஊழியர்களோடு சுற்றுப் பயணம் செய்யும் போது வறட்சி மிகுந்த குல்பர்க்கா என்ற இடத்திற்குப் போனேன். அங்கே பண்ணை நிலம் காய்ந்து கிடந்தது. நாங்கள் அங்கே போய் கையோடு கொண்டு வந்த உணவுப் பொட்டலங்களைப் பிரித்துச் சாப்பிட்டபோது, ஒரு ஆணும், பெண்ணும் அடியற்ற மரம் போல் சாய்ந்து கிடப்பதைக் கண்டேன். அவர்களை எழுப்பி விசாரித்ததில், அந்த நிலத்துச் சொந்தக்காரர், ‘பயிர் செய்து கட்டுபடியாகாது. நீங்கள் எங்கே வேண்டும் என்றாலும் போகலாம்’ என்று சொல்லிவிட்டு, பெங்களூருக்குப் போய்விட்டாராம் காரில். இந்தத் தம்பதி, குழந்தை குட்டிகளோடு குடிக்கக் கூழ் கூட இன்றி அல்லாடினார்கள். அந்த நிலப்பிரபு அப்படி நடந்து கொண்டது சரிதான் என்பது மாதிரியான மனோ நிலையில் இருந்தார்கள். இவர்களிடம் போய் “உங்களால் இந்த நிலம் விளைந்த போது உங்களுக்கு கூலியைத் தவிர பிரமாதமாக எதையும் கொடுக்காத இந்தப் பண்ணை