பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

83

யார், வறட்சி வந்த போது உங்களைக் கைவிடுவது நியாயமா?” என்று கேட்டேன். அப்போது தான் அவர்களுக்கு ஆங்கிலத்தில் சொல்வோமே ‘கான்ஷியஸ்னஸ்’ என்று அந்த உணர்வு ஏற்பட்டது. பண்ணையார் இருக்கும் பெங்களூர் திக்கை அவர்கள் கோபமாக முறைத்துப் பார்ப்பது போல் எனக்குத் தோன்றியது. இப்படித்தான் இன்று நாட்டில் பெரும்பாலான ஏழைகள், தாங்கள் ஏன் இந்த நிலையில் இருக்கிறோம் என்ற உணர்வில்லாமலேயே இருக்கிறார்கள். இவர்களுக்குப்போய்ச் சேருகின்ற, நடிகை நளினி குழந்தை பெற்ற வரலாறு, ஸ்ரீபிரியாவின் காதல் தோல்வி, ஆகிய சமாச்சாரங்களை மீறி நடப்பு நிலையை எடுத்துரைப்பது இவர்களுக்கு இப்போதைய படைப்பாளிகளுக்கு தலையாய கடமையாகிறது. இந்தக் கடமையின் ஒரு பகுதியாக, ஒரு கதை எழுதிக் குங்குமத்தில் இடம்பெற வைத்தேன்.

தஞ்சைக் காவேரியாகாத தலைக்காவேரி

மைசூருக்கும், மங்களூருக்கும் இடையே மலை சூழ்ந்த பகுதி மெர்க்காரா; இதை தமிழில் குடகு என்று சொல்கிறோம். இங்கே ஒவ்வொரு குடும்பத்தினரும் நமது பாதுகாப்பு படையில் பணிபுரிபவர்கள். தன்மானப் பிரியர்கள். இங்குள்ள பெண்கள் பேரழகிகள். எழில் சிந்தும் இயற்கை. இந்தப் பகுதிக்குச் சென்ற நான் அப்பாவித்தனமாக ஒரு விடுதியில் ஆறிப்போன அதோடு அரைகுரையாய் வெந்த மீன் வறுவலைத் தந்ததற்காக ஹோட்டல்காரரிடம் சென்று சண்டை போட்டேன். வாய்ச் சண்டை தான். உடனே நான்கைந்து, கூர்க் இளைஞர்கள் என்னைச் சுற்றி வளைத்