பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எனது கதைகளின் கதைகள்

85

ளாக ஆனார்கள். எல்லாம் முடிந்ததும், நான் என்னை ஏன் அப்படித் திட்டினிர்கள் என்று கேட்டேன். உடனே ஒருவர் “நான் கோயம்புத்துாரில் இருக்கும்போது உங்க ஆட்கள் என்னைத் திட்டினாங்கோ - இது பதிலுக்குப் பதில்” என்றார்.

ஒரு கூர்க்கு திருமணத்தையும், மெர்க்காரா மலை நகரத்தில் நான் பார்த்தேன். பெண்கள் அழகோவியங்கள். அவர்கள் நம் பெண்களை மாதிரி முந்தானையை முன்னால் போடாமல், தோளில் இருந்து கீழே அங்கிமாதிரி போட்டிருந்தார்கள். இந்தக் கோலத்தில் அவர்கள் நிச்சயமாக மயில் மாதிரியே தோன்றினார்கள். இந்தக் கல்யாணத்தில், கையில் வாளோடும், பல்வேறு விதமான மெடல்களோடும் நான்கைந்து பேர் உட்கார்ந்திருந்தார்கள். இவர்கள், குரு பரம்பரையாம். சின்னப் பையனிடம்கூட, பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என்னதான் என்னைத் திட்டியவர்கள் நண்பர்களாகி விட்டாலும், எனக்கு மனம் கேட்கவில்லை. நான்குபேர் முன்பு அவமானப்பட்டது போன்ற எண்ணம். இந்த எண்ணச் சுமையோடு மறுநாள் ஒரு மலைக் கிராமத்திற்கு ஜீப்பில் திரைப்படப் பிரிவுடன் சென்றேன். மெர்க்காரா நகரிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் பஸ் போக்குவரத்து இல்லாத தொலைந்து போன கிராமம். வழியெல்லாம் மலைக்குகைகள், அந்தக் கிராமத்திலோ நாலு பக்கமும் மலை. அதன் மேலுள்ள ஆகாயத்தில் கூட மலைகள் ஆக்கிரமித்திருந்தன. இந்தக் கிராம மக்கள் சூரியோதயத்தை பார்க்க முடியுமா என்பதே சந்தேகம். ஆனாலும்,