பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

சு. சமுத்திரம்

இங்கே வாலிபால் கோர்ட் இருந்தது. பங்களாக்கள் இருந்தன. எங்களைப் பார்த்ததும், அந்த ஊர் மக்களுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. ஆங்கிலம் தெரிந்தவர்கள் பலர் இருந்ததால், நான் பல்வேறு விஷயங்கள் பற்றி அவர்களுடன் உரையாடினேன். இந்த மாதிரி அடிக்கடி நான் வந்து சினிமா போட்டுக் காட்ட வேண்டும் என்று அந்த ஊர்ப்பிரமுகர்கள் கேட்டுக் கொண்டார்கள். இந்தச் சமயத்தில் ஒரு இளம்பெண் என்னை தயக்கமாகப் பார்த்தாள். அவளுக்கு முப்பது வயது இருக்கும். முழு ஆப்பிள் நிறம். சிறிது நேரம் கழித்து ‘நீங்கள் மெட்ராசா’ என்று தமிழில் கேட்டாள். எனக்கு ஆச்சரியமாகவும், ஆனந்தமாகவும் இருந்தது. என் உதவியாளர்களிடமே தமிழில் உரையாட முடியாத எனக்கு அந்தக் காட்டு சூழலில் ஒரு பெண் தமிழில் பேசுவதில் ஆனந்தம் அடைந்தேன். பேச்சுக் கொடுத்துப் பார்த்ததில், அவள் தனது தங்கை வீட்டிற்கு (சென்னை) அடிக்கடி வருவாள் என்றும், அங்கே தமிழ் கற்றுக் கொண்டதாகவும் சொன்னாள். அவள் குடும்பச் சூழ்நிலையைப் பற்றிக் கேட்டதும் யாருக்கும் தெரியாமல் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டாள். பின்னர் சிறிது தூரம் என்னை பின்னால் நடக்கச் சொன்னாள். எனக்கு ஒரே பயம். கூர்க்கு நண்பர்கள் சொன்ன துப்பாக்கிச் சூடு, வாயைக் கட்டிப் போட்டது. ஆனால் அவளோ நெடுநாளைய தோழனைப் பார்த்ததுபோல் ‘திக்கு தமிழில்’ தனது குடும்ப சோகத்தைச் சொன்னாள். அவள் டென்னிஸ் விளையாட்டுக் காரியாம். ஒருவரைக் காதலித்து கை பிடித்திருக்கிறாள். ஒரே ஜாதி என்பதால் பிரச்னை இல்லை. இரண்டு குழந்தைகளுக்கும் தாயாகிவிட்டாள். ஒரு நாள் ஏதோ நிலத்தகரா