பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

சு. சமுத்திரம் ☐

மோதிரம், “இதை கோவிலில் வைத்து அர்ச்சனை செய்து ஒரு வருடமாக போட்டுக்கிட்டேன். என் ஞாபகமாக நீங்க போட்டுகோணும்” என்றாள். நான் அதை வாங்கி கண்களில் ஒற்றிக் கொண்டு கையில் போட்டுக் கொண்டேன். இந்த நிகழ்ச்சி நடந்து பலப்பல வருடங்கள் ஆகின்றன. எனக்கு வாழ்க்கையில் சலிப்பு தோன்றும் நேரத்தில் எல்லாம் இந்த மோதிரத்தையும், அந்தப் பெண்ணையும் நினைத்துக் கொள்கிறேன். இந்தப் பின்னணியில், “தஞ்சைக் காவேரி ஆகாத தலைக் காவேரி” என்ற சிறுகதை ஒன்றை எழுதினேன். “குங்குமம்” அதைப் பிரசுரித்தது.

கள்ளி நியாயம்

பிருந்தாவனுக்கு அருகே ஒரு கிராமம். நானும், என் உதவி அதிகாரியும் ஒரு தேநீர்க் கடைக்குப் போனோம். அங்கே நான் தமிழ்நாட்டிலிருந்து வந்த பெரிய அதிகாரி என்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன். உடனே, அங்கிருந்த கன்னடக்காரர்கள் “இங்கே தமிழன் ஆதிக்கம்தான்”, கன்னடத்தை சேர்ந்த ஒருவரைப் போட்டால் என்ன என்கிற பாணியில் முணுமுணுத்தார்கள். எனக்குச் சங்கடமாக இருந்தது. அரைகுறைத் தமிழில் உரையாடிய அவர்களை வேதனையோடு பார்த்தபோது கீழே ஒருவர் தரையில் உட்கார்ந்து தனிக் கிளாசில் டீ குடித்துக் கொண்டிருந்தார். உடனே அவர் யார் என்றேன். ஆதிதிராவிடர் என்று பதில் வந்தது. உடனே நான், ‘தமிழனும், கன்னடனும் ஒரே ஜாதிப்பா... ஏன்னா நாம ரெண்டு பேருமே ஆதி திராவிடர்களை இப்படித்தான் அமுக்கி