பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

சு. சமுத்திரம் ☐

கர்நாடக அமைச்சர் திரு சிந்தியாவின் தலைமையில், தேவதாஸி முறைமைக்கு எதிராக கல்லூரி மாணவ மாணவியரை வைத்து ஊர்வலம் நடத்தினோம். பிறகு ஒரு தேவதாஸிக்கும் ஒரு சமூகத் தொண்டருக்கும் திருமணம் செய்து வைத்தோம்.

இந்த தேவதாஸிப் பெண்ணும், இந்த “சமூகத் தொண்டரும்” இப்படி பல இடங்களில் பல விழாக்களில் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது பின்னர் தெரியவந்தது. சொன்னாலும் வெட்கமடா - சொல்லாவிட்டால் துக்கமடா என்ற கதை தான். இந்த விழாவில் ஆடியன்ஸ் பஞ்சத்தைப் போக்குவதற்காக, மகளிர் காப்பகத்திலிருந்து சுமார் நூறு பெண்கள் வரவழைக்கப்பட்டிருந்தார்கள். இந்தப் பெண்கள், விடுதிக்குப் போன பிறகு ஒரே அழுகை மயமாய் இருப்பதாக எனக்குத் தகவல் வந்தது. உடனே, அதை விசாரிப்பதற்காக அந்த விடுதிக்கும் போனேன். இந்தப் பெண்கள் கற்பழிக்கப்பட்டவர்கள், அல்லது காதலர்களால் கைவிடப்பட்டவர்கள். இவர்களைத் தேவதாஸிகளாக கூட்டத்தில் நிறுத்தியது அவர்களுக்கு கேவலம் ஆகிவிட்டதாம். எல்லாப் பெண்களும் அழுது அழுது கண்கள் வீங்கிப் போயிருந்தார்கள். இவர்களே இளக்காரமாக நினைக்கும் அளவிற்கு இருந்தால், தேவதாஸிகளின் நிலமை எப்படி இருந்திருக்கும் என்பதை யூகிக்கலாம். இந்தப் பெண்களைச் சமாதானப்படுத்தி விட்டு, அவர்களில் பல பெண்களின் வாழ்க்கையைக் கேட்டேன். கேட்க கேட்க மனம் கொதித்தது. ஒரு பெண்-தர்மஸ்தலா பகுதியைச் சேர்ந்தவள். பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவள். அந்தக் குடும்பத்தில்