பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

95

வேலைக்காரனாக இருந்த ஒரு இளைஞனை காதலித்து திருமணம் செய்து தனிக்குடித்தனம் நடத்தியிருக்கிறாள். இதைப் பொறுக்காத அவள் தந்தையும், அண்ணனும் இவள் கணவனைக் கொலை செய்து விட்டார்கள். கொலைகாரர்கள் கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. இந்த பெண் சுமார், 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த விடுதிக்கு அனுப்பப்பட்டாள். இவளை, இவள் அம்மாவும், இவளது அண்ணன் மனைவியும் அடிக்கடி வந்து பார்த்தார்களாம். அம்மாக்காரி. தன் கணவனுக்கு மடிப்பிச்சைக் கேட்கிறாள். மகனின் உயிரைப் பறித்து விட வேண்டாம் என்று மகளிடம் மன்றாடுகிறாள். அண்ணிக்காரியும் மடிப்பிச்சைக் கேட்கிறாள். இந்தப் பாவி பெண்ணுக்கோ என்ன செய்வது என்று புரியவில்லை. ஏதோ எனக்கு தோன்றியதைச் சொன்னேன். இப்போது என்ன ஆச்சுதோ தெரியவில்லை.

இதேபோல் இன்னொரு இளம்பெண். கைவிடப்பட்ட பெண்களின் நிலைமையைப் பற்றி ஆய்வு செய்து டாக்டர் பட்டம் வாங்குவதற்காக ஒரு பெங்களூர் பயல் இந்த விடுதிக்கு வந்திருக்கிறான். இந்தப் பெண்ணை காதலிப்பதாகவும், கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் வாக்குக் கொடுத்திருக்கிறான். அனாதை விடுதியிலேயே பிறந்து வளர்ந்த அந்த அப்பாவிப் பெண், வாழ்க்கையின் சுகந்தத்தை சுவாசிக்கலாம் என்று மனம் மகிழ்ந்தாள். இந்த விடுதியின் தலைவியும், அந்த வாலிபனை வெகுவாகப் பாராட்டியிருக்கிறாள். ஆனால், அந்தப் பயலோ ஆய்வு முடிந்ததும் திரும்பிப்பாராமல் போய்விட்டான். இந்தப்